வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு எதுவும் செய்யவில்லை என்று பெரம்பூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த பின் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். மேலும் பொதுப்பணித்துறை சார்பில் நிவாரணப் பணிக்கு ரூ.450 கோடி ஒதுக்கப்பட்டதாக அரசு தெரிவித்தது. அரசு செலவிட்ட தொகை பற்றி வெள்ளை அறிக்கை தேவை எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
எங்கே கமிஷன் வாங்கலாம் என்பதிலேயே அமைச்சர்கள் குறியாக உள்ளனர் என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் செயலற்ற ஆட்சி நடைபெற்று வருகிறது என்றும் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரான மு.கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்துள்ளார் என அவர் தெரிவித்தார். பிரதமர் மோடியின் வருகையில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.