அ.தி.மு.க., என்றுமே மதவாதத்துக்கு துணை போனது கிடையாது. இனிமேலும், அவ்வாறு செய்யமாட்டோம். பா.ஜ., மதவாதக் கட்சி; தமிழகத்தில் காலுான்ற வாய்ப்பே இல்லை,” என, தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லுார் ராஜூ கூறியிருக்கிறார். ‘தமிழக அரசை, மத்திய அரசு ஆட்டிப் படைக்கிறது; மறைமுகமாக ஆட்சி செய்கிறது’ என்ற குற்றச்சாட்டுகளுக்கும், ‘வரும் தேர்தல் களில், அ.தி.மு.க., – பா.ஜ., இடையே கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளது’ என்ற யூகங்களுக்கும் பஞ்சமில்லை.
அதற்கேற்ப, ‘எங்களை பார்த்துக் கொள்ள பிரதமர் மோடி இருக்கிறார்’ என, பொது மேடையிலேயே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதும், கூட்டணி யூகத் திற்கு வலுச்சேர்ப்பதாக அமைந்தது. ஆனால், இதையெல்லாம் தகர்த்தெறி யும் வகையில், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லுார் ராஜூ, வெளிப்படையாகவே, பா.ஜ.,வைசாடினார்.தனியார் ‘டிவி’ சேனலுக்கு நேற்றிரவு அவர் அளித்த பேட்டி:
முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஆட்சி, சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. எங்களை, எங்களது கட்சியைச் சிறுமைப்படுத்தி, பா.ஜ.,வை தமிழகத்தில் வளர்க்க மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் முயற்சிக்கிறார்; அது, நடக்காது. எம்.ஜி.ஆர்., – அண்ணாதுரை காலம் முதல் ஜெ., வரை, மதவாதத்துக்கு அ.தி.மு.க., துணைபோனது கிடையாது. இனிமேலும், அவ்வாறு செய்ய மாட்டோம்.
பா.ஜ., மதவாத கட்சி. அது, தமிழகத்தில் காலுான்ற வாய்ப்பே இல்லை.தமிழக நலனுக்காக, பிரதமர் மோடியுடன்இணக்கமாக உள்ளோம். அவ்வாறு இருந்தும், இங்கு பொன்ராதாகிருஷ்ணன் போன்றோர், எங்களது ஆட்சியை தரக்குறைவாக பேசுகின்றனர்; அது, சரியல்ல. இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் எங்களுக்கு வழங்கியது, மிகச்சரியான நடவடிக்கை. ஓ.பி.எஸ்., இணைந்ததால்தான், இரட்டை இலை சின்னம், கட்சிக்கு கிடைத்தது என்பதை ஏற்க முடியாது. இரட்டை இலை கிடைத்து விட்டது என்பUதால், எல்லா பிரச்னையும் தீர்ந்துவிட்டது என்றில்லை.
இதுவரை, பெரும் தலைவர்கள் தனிப்பட்ட செல்வாக்கை மக்களிடம் வைத்தி ருந்தார்கள்; மக்கள் சக்தி மிக்க இயக்கமாக மாற்றினார்கள். தற்போது, அவ்வாறான செல்வாக்குமிக்க தலைவர் இல்லை. ஜெ., மறைவுக்குப்பின், கூட்டுத்தலைமை கொண்ட தாக மாறிவிட்டது. எங்களின் செயல்பாடுகளை வைத்தே மக்கள் ஆதரிக்கிறார்கள். இவ்வாறு, செல்லுார் ராஜூ தெரிவித்தார்.