தமிழ் வானொலி ஒன்றிற்கு சமீபத்தில் பேட்டியளித்த நடிகர் விஜய் சேதுபதி, காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றும், சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது மனவருத்தம் தருவதாகவும் கூறினார். இந்நிலையில் இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பாண்டியராஜன், பிரபலங்கள் இந்த விவகாரத்தில் ஆழ்ந்து யோசித்து பேச வேண்டும் என்றும், ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு தொடர்பான விவகாரத்தில் பின்புலத்தை விசாரித்துக் கொண்டு விஜய்சேதுபதி கருத்து தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதனிடையே காஷ்மீர் விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினியும், மத்திய அரசுக்கு எதிராக விஜய் சேதுபதியும் கருத்து தெரிவித்திருப்பது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.