கோவில்பட்டி நகரில் 29 மினிபஸ்கள் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 24 பஸ்கள் பஸ் நிலையத்தின் உள் பகுதியில் இருந்தும் மற்ற பஸ்கள் பஸ் நிலையத்தின் வெளிப்பகுதியில் இருந்தும் இயங்குவதற்கு அனுமதி பெற்றுள்ளன. கோவில்பட்டி அண்ணாபஸ் நிலையம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு, பஸ் இயக்கப்பட்டு வருகின்றனர். மினிபஸ்கள் கிழக்கு பகுதி பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்தன.
பஸ் நிலையத்திற்கு மினிபஸ்கள் வருவதால் அரசு பஸ்கள் இயக்க முடியவில்லை, இடம் நெருக்கடி ஏற்படுகிறது, மேலும் அரசு பஸ்கள் நேரத்தில் மினிபஸ்கள் செல்கின்றன. எனவே மினிபஸ்களை பஸ் நிலையத்திற்குள் உள்ளே அனுமதிக் கூடாது என்று அரசு பஸ் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கிழக்கு பகுதி பஸ் நிலையத்தின் முன்பகுதியில் இருந்து மினிபஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.
அதன் படி இன்று பஸ் நிலையத்தின் முன்பகுதியில் இருந்து மினிபஸ்களை இயக்க வருவாய்துறை மற்றும் போக்குவரத்து அலுவலர்கள் அறிவுறுத்தினர். ஆனால் மினிபஸ் உரிமையாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீடீரென வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளது மட்டுமின்றி தங்களது மினிபஸ்களை வட்டார போக்குவரத்து அலுவலகம் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டள்ளனர். தங்களை பஸ் நிலையத்திற்குள்ளே அனுமதிக்காத வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.