கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனிஸ்காந்த், விஜயலட்சுமி, காளி வெங்கட், ராதாரவி, வேலராமமூர்த்தி, குரேஷி மாளவிகா, அவினாஷ், கோடங்கி வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் மிடில்கிளாஸ்.
முனிஸ்காந்த் ஒரு தனியார் நிறுவனத்தில் அசிஸ்டெண்ட் ஆக வேலை செய்து வருகிறார். அவரது மனைவியாக விஜயலக்ஷ்மி, இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். சாதாரண மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.
வீட்டின் தேவைகளுக்காக துணி தைப்பது, இன்ஸ்டால்மெண்ட் வியாபாரம் செய்வது போன்ற சிறு சிறு வேலைகளை செய்து வருகிறார்.
இருந்து மீண்டும் அவர்களுக்காக பணம் பத்தவில்லை என்று எப்பொழுது பார்த்தாலும் முனிஸ்காந்தை திட்டிக் கொண்டே இருப்பார்.
இந்த சமயத்தில் முனிஷ்காந்தின் பல வருடங்களுக்கு முன்பு இறந்து போன தந்தை வேலராமமூர்த்தி, அவர் காலத்தில் ஒரு சிறிய கடை ஒன்றை சேட்டு ஒருவருக்கு வகை கொடுத்து விடுகிறார்.
ஒரு நாள் வீட்டை சுத்தம் செய்யும் போது ஒரு பெட்டியில் அந்த கடையை கொடுத்ததற்கான பத்திரம் ஒன்று இருக்கிறது. இன்று அதன் விலை கோடி கணக்கில் போகிற அளவுக்கு இருக்கிறது.
அதனை எடுத்துக் கொண்டு முனிஷ்காந்த் சேட்டிடம் போய் அதனை சொல்லியதும் சேட்டும் அவருக்கு ஒரு கோடி ரூபாய்க்கு செக் எழுதி கொடுக்கிறார் ஆனால் அதில் பெயர் எழுதவில்லை.
அதனை எடுத்துக் கொண்டு வரும் வழியில் செக்கை முனீஷ்காந்த் தொலைத்து விடுகிறார். அதை கொடுத்த சேட்டும் இறந்து விடுகிறார். அதன் பிறகு முனீஸ் காந்த் விஜயலட்சுமி வாழ்க்கையில் என்ன நடந்தது? செக்கு கிடைத்ததா? இல்லையா? என்பதே மிடில் கிளாஸ் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்பக் கலைஞர்கள்
தயாரிப்பு : தேவ் & கே வி துரை
ஒளிப்பதிவு: சீனிவாசன்
இசை : பிரணவ் முனிராஜ்
படத்தொகுப்பு : சான் லோகேஷ்
கலை இயக்கம் : எம் எஸ் பி மாதவன்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர்

