ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று தனது புதிய அமைப்பை அறிவித்துள்ளார். எம்.ஜி.ஆர் – அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கியுள்ள அவர் அதற்ன கொடியை அறிமுகம் செய்தார். ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு தான்தான் என்றும் தீபா தெரிவித்துள்ளார். சென்னை தி. நகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தீபா, தன்னை நம்பி வந்தவர்களை கைவிட மாட்டேன் என்று கூறினார். எனது அரசியல் பயணம் இன்று முதல் தொடங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
