விவசாயிகளின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, பாசனத்திற்காக மேட்டூர் அணையை, வரும் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி திறந்துவிட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கர்நாடகாவில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், காவிரியில் தண்ணீர் அதிகரித்துள்ளது. இதனால், மேட்டூர் அணையில் 2.5 அடிக்கும் மேல் நீர் இருப்பு உயர்ந்துள்ளது. கர்நாடகா தண்ணீர் தராததாலும், வறட்சியாலும், சில மாதங்களுக்கு முன் சம்பா சாகுபடி கைவிடப்பட்டது. எனவே, மீண்டும் சம்பா சாகுபடிக்காக இந்த உத்தரவை பிறப்பித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நீண்டகால நெல் ரகங்களை விட்டுவிட்டு, மத்திய, குறுகிய கால ரகங்களை விதைத்து பயனடைய விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.