மெஸன்ஜர் விமர்சனம்

ரமேஷ் இளங்கமணி இயக்கத்தில், ‌ஸ்ரீராம் கார்த்திக், மனிஷா ஸ்ரீ, பாத்திமா நஹும், வைஷாலி ரவிச்சந்திரன், ஜீவா ரவி, லிவிங்ஸ்டன் ஆகியோர் நடிப்பில் வெளிவரவுள்ள படம் மெஸன்ஜர்.

நாயகன் ஸ்ரீராம் கார்த்தி, தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து  வருகிறார். அப்பொழுது ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொள்வதற்காக முயற்சி செய்கிறார். 

அந்த சமயத்தில் பேஸ்புக் பக்கத்தில் ஒரு பெண் ஒருவரிடம் இருந்து மெசேஜ் வருகிறது. அதில் நீங்கள் தற்கொலை செய்து கொள்ளாதீர்கள் நீங்கள் வாழ வேண்டும் என்று வருகிறது. 

அந்த மெசேஜ் பெண்ணிடம் ஸ்ரீராம் கார்த்திக் தொடர்ந்து பேசுகிறார். 

அந்த சமயத்தில் அந்தப் பெண் தான் இறந்து விட்டதாகவும் மெசஞ்சர் மூலம் உங்களிடம் பேசுவதாகவும் கூறுகிறார். அதன் பிறகு அந்தப் பெண் யார் என்று கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். 

அப்படி அந்தப் பெண் யார் என்று தேடி செல்லும் பொழுது அந்தப் பெண் இறந்ததற்கான காரணமும் ஸ்ரீராம் கார்த்திகை எப்படி தெரியும் என்றும் தெரிய வருகிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதை‌ வித்தியாசமான முறையில் சொல்லி இருக்கிறார் இயக்குனர். 

புதுவிதமான கற்பனையில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். ஆனால் இந்த கற்பனையை சினிமா ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்பது சந்தேகமே.

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு: பிவிகே பிலிம் பேக்டரி 

தயாரிப்பு: பி.விஜயன்

எழுதி இயக்கியவர்: ரமேஷ் இளங்கமணி

DOP: பால கணேசன் ஆர்

இசை: அபுபக்கர் எம்

எடிட்டர்: பிரசாந்த் ஆர்

கலை: பாலசுப்ரமணியன்

DI: Lixo Pixels

வண்ணம்: ஜான் ஸ்ரீராம்

இணை இயக்குனர்: தா. கணேசன்

ஆடியோகிராபி: ஆர். கிருஷ்ண மூர்த்தி டி.எஃப்.டெக்

தயாரிப்பு நிர்வாகி: ஏ.முனிஷ்

தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: சுமதி பிரபாகரன்

பிஆர்ஓ: சதீஸ்வரன்

டிஜிட்டல் விளம்பரம்: சுந்தர் பாலா

விளம்பர வடிவமைப்பு: சதீஷ் ஜே