மெரி கிறிஸ்துமஸ் விமர்சனம்

பாலிவுட் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, கேத்ரினா கைஃப், ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார், சண்முகராஜன், கவின் பாபு ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் மெரி கிறிஸ்துமஸ்.

விஜய் சேதுபதி, துபாயில் பணியாற்றி விட்டு பல வருடங்களுக்குப் பிறகு மும்பையில் உள்ள தனது வீட்டுக்கு வருகிறார். விடிந்தால் கிறிஸ்துமஸ் என்பதால் விளக்குகளின் வெளிச்சத்தில் ஊரே ஜொலித்துக் கொண்டிருக்கிறது.

ஒரு ஓட்டலுக்கு, விஜய் சேதுபதி செல்கிறார். அங்கே தன்னுடைய மகளுடன் இருக்கும் கத்ரினா கைஃப்பை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது விஜய்சேதுபதிக்கு. பிறகு அவர் போகும் இடங்களுக்கு எல்லாம் பின் தொடர்ந்து செல்கிறார்.

ஒரு சூழ்நிலையில் இருவரும் ஒன்றாக பயணிக்கும் நிலை ஏற்படுகிறது. முன்பின் அறிமுகம் இல்லாத இருவரும், தங்களது வாழ்க்கைப் பற்றி பேசும் போது, கத்ரினா கைஃப் தனது கணவருடன் கருத்து வேறுபாடோடு வாழ்வதை சொல்கிறார். விஜய் சேதுபதி தன்னுடைய காதலியின் பிரிவை பற்றியும் சொல்கிறார்.

கத்ரீனா கைஃப் வீட்டிற்கு செல்கின்றனர் இருவரும். கத்ரினா கைஃப் தனது மகளை தூங்க வைத்துவிட்டு, விஜய் சேதுபதியுடன் வெளியே சென்றுவிட்டு திரும்ப வீட்டுக்கு வரும்போது அவரது கணவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்த நிலையில் கிடக்கிறார். கத்ரீனா கைஃப் கணவரை கொன்றது யார்? எதற்காக கொலை செய்தனர்? என்பதை பல திருப்பங்களுடன் சொல்வது தான் மேரி கிறிஸ்மஸ் படத்தோட மீதி கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இயக்கம் : ஸ்ரீராம் ராகவன்
எழுத்தாளர்கள் : பிரதீப் குமார் S, அப்துல் ஜப்பார், பிரசன்னா பாலா நடராஜன், லதா கார்த்திகேயன்
ஒளிப்பதிவு : மது நீலகண்டன்
இசை : ப்ரீத்தம்
பின்னணி இசை : டேனியல் B ஜார்ஜ் படத்தொகுப்பு : பூஜா லதா சுருதி
மக்கள் தொடர்பு : யுவராஜ்