மெர்சலுக்கு இலங்கை அமைச்சர் ஆதரவு

நடிகர் விஜய் நடித்து சமீபத்தில் வெளிவந்துள்ள மெர்சல் திரைப்படம் தமிழகத்தையும் டந்து தேசிய அளவில் பிரதான எதிர்க்கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி, மற்றும் தமிழகத்தில் உள்ள அணைத்து எதிர்க்கட்சிகளும்  ஆதரவாக பேசி  நாடுமுழுவதும் பேசப்பட்ட இத்திரைப்படத்தை பற்றி இலங்கை அமைச்சர் ஆதரவாக பேசியிருப்பது பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இலங்கை அமைச்சரும் நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க மெர்சல் திரைப்படம் குறித்து கூறுகையில்,

அரசு மருத்துவமனைகள் வளர்ச்சி பெற வேண்டுமானால் இலங்கை அரசியல்வாதிகள் மெர்சல் படத்தை பார்க்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் அதிபர், பிரதமர், சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு சென்று மருத்துவம் பெற வேண்டும். அதற்கு முன்னதாக மெர்சல் திரைப்படத்தினை பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் .