டிரெண்டிங்கில் வெற்றியின் “மெமரிஸ்” பர்ஸ்ட் லுக்!

எட்டு தோட்டாக்கள், ஜீவி போன்ற வித்தியாசமான படங்களை கொடுத்து முதலிரண்டு படங்களிலயே தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகர் வெற்றி. இந்தப் படங்களுக்குப் பிறகு அவருடைய அடுத்த படம் என்ன என்று ரசிகர்கள் எதிர்பார்க்க, தற்போது நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், சிஜூதமீன்ஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் ஷ்யாம் பிரவீன் இயக்கத்தில் வெற்றி நடிப்பில் உருவாகியுள்ள “மெமரிஸ்” படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

இந்தப் போஸ்டரில் உள்ள “மெமரிஸ்” என்கிற டைட்டலுக்கேற்ற ஹீரோவின் டிசைனும், மெமரிஸ் குறித்த வாக்கியமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டதால் இப்போது இந்தப் போஸ்டர் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. மேலும் இந்தப் படத்தின் அடுத்தகட்ட பணிகள் குறித்த அறிவிப்புகளை, சுவாரஸ்யமான தகவல்களை அடுத்தடுத்து வெளியிட இருக்கிறது “மெமரிஸ்” படக்குழு.