திரவ் இயக்கத்தில், கிஷோர் குமார், சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியான், ஹரிஷ் உத்தமன் பேபி தனன்யா வர்ஷினி, மாஸ்டர் ஜஸ்வந்த் மணிகண்டன் வெளிவந்துள்ள படம் மெல்லிசை.
நாயகன் கிஷோர் குமார் பள்ளியில் பிடி ஆசிரியராக இருந்து வருகிறார் அவருடைய மனைவியாக இருக்கும் சுபத்ரா ஆகட்டும் அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள்.
கிஷோரின் மகள் வர்ஷினி தொலைக்காட்சியில் நடக்கும் பாட்டு போட்டியில் தன்னுடைய அப்பா பாட வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதற்கான முயற்சியில் ஈடுபட்டு அதற்கான வாய்ப்பும் கிடைக்கிறது.
தொலைக்காட்சியில் பாடுவதால் கிஷோர் குமார் பிரபலம் ஆகிறார். அதில் பங்கேற்பதற்காக பள்ளிக்கு அடிக்கடி விடுப்பு எடுக்கிறார். இதனால் அவருக்கும் பள்ளி மேலாளருக்கும் இடையே சிறு சிறு வாக்குவாதங்களும் ஏற்படுகின்றன.
இந்த சமயத்தில் பாட்டு போட்டிக்காக அடிக்கடி விடுப்பு எடுப்பதால் பள்ளி மேலாளர் அவருடைய வேலையை பறிக்கிறார்.
அதன் பிறகு தன்னுடைய மகளின் ஆசையான பாட்டு போட்டியில் கிஷோர் வெற்றி பெற்றாரா? இல்லையா? அவருடைய ஆசிரியர் வேலை மீண்டும் கிடைத்ததா? இல்லையா? என்பதே மெல்லிசை படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம் : திரவ்
ஒளிப்பதிவு : தேவராஜ் புகழேந்தி
இசை : சங்கர் ரங்கராஜன்
படத்தொகுப்பு : திரவ்
தயாரிப்பு : திரவ்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர்

