ஊர் விட்டு ஊர் வந்து வயிற்றுப் பிழைப்புக்காக சர்க்கஸ் நடத்துகிற குடும்பத்தின் பெண்ணாக கதாநாயகி ‘மெஹந்தி.’
அந்த சர்க்கஸ் குடும்பம் கொடைக்கானலின் பூம்பாறை கிராமத்தில் சர்க்கஸ் நடத்த வருகிறது. ஜாதி, அந்தஸ்து என கெத்துகாட்டும் மாரிமுத்துவின் மகனாக கதாநாயகன் மாதம்பட்டி ரங்கராஜ். ரங்கராஜ்க்கு மெஹந்தி மீது பார்த்தவுடன் காதல் வருகிறது.
இவருக்கு சர்ச்சு பாதர் வேல ராமமூர்த்தி, நண்பனாக வரும் ஆர் ஜே விக்னேஷும் உதவி செய்கிறார்கள்.
ஜாதியை காரணம் காட்டி அடித்து, பிரித்து இழுத்து வருகிறார் ரங்கராஜ் அப்பா மாரிமுத்து.
பிரிந்த காதலர்களின் வாழ்க்கையில் என்ன என்ன மாற்றங்கள் நடந்தது, அவர்கள் மீண்டும் சந்தித்தார்களா என்பதே மீதிக்கதை.
பழையக் காதல் கதையாக இருந்தாலும் ரசிக்கும்படி சொல்லி இருக்கிறார் இயக்குனர் சரவண ராஜேந்திரன்.
அறிமுக நாயகன் மாதம்பட்டி ரங்கராஜ், காதலில் கரையும் போதும், காதல் தோல்வியால் அவஸ்தையுறும் போதும் அளவான நடிப்பை சிறப்பாக கொடுத்துள்ளார்.
கண்களால் காதலை வெளிப்படுத்துவது, சிரிப்பில் ரசிகர்களை ஈர்க்கிறார் நாயகி ஸ்வேதா திருபாதி.
“எங்களுக்கும் இதயம் உங்க அளவுதான்” “மனசுக்குள்ள இருக்குறவன்தான் புருசன்” என வசனங்களால் ஈர்க்கிறார் இயக்குநர் ராஜுமுருகன்.
கிறிஸ்தவ பாதிரியாராக வேல ராமமூர்த்தி, நாயகனின் அப்பாவாக மாரிமுத்து, நாயகனின் நண்பனாக ஆர்ஜே. விக்னேஷ், நாயகியின் அப்பாவாக சன்னி சார்லஸ் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
ஜான் ரோல்டன் இசையில் பாடல்கள் அருமை. ‘வெள்ளாட்டுக் கண்ணழகி’ பாடல் கவிதை.
ஜான் ரோல்டன் இசையில் பாடல்கள் இதமோ இதம். ‘வெள்ளாட்டுக் கண்ணழகி’ பாடல் காட்சியாக்கப்பட்டிருக்கும் விதம் கவிதை!
காதலில் தோல்வியைச் சந்தித்தவர்களை அதிகம் ஏங்க வைக்கும் இந்த “மெஹந்தி சர்க்கஸ்”