மழையில் நனைகிறேன் விமர்சனம்

ராஜ்ஸ்ரீவென்ச்சர்ஸ் சார்பில், ஸ்ரீவித்யா ராஜேஷ் பி. ராஜேஷ் குமார் தயாரிப்பில், டி.சுரேஷ் குமார் இயக்கத்தில், அன்சன் பால், ரெபா ஜான், மேத்யூ வர்கீஸ், அனுபமா குமார், கிஷோர் ராஜ்குமார், ஷங்கர் குரு ராஜா, வெற்றிவேல் ராஜா ஆகியோர் நடிப்பில் வெளி வரவிருக்கும் படம் மழையில் நனைகிறேன்.

மிகவும் வசதி படைத்த வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள் கணவன் மனைவியான மேத்யூ வர்கீஸ் & அனுபமா குமார். இவர்களது ஒரே மகனாக அன்சன் பால் இருக்கிறார். அப்பா என்னதான் கண்டிப்பாக இருந்தாலும் அம்மா செல்லமாக இருக்கிறார். வசதியான குடும்பம் என்பதால் அன்சன் பால் எந்த வேலைக்கும் போகாமல், குடிப்பது, நண்பருடன் ஊர் சுற்றுவது, ஜாலியாக இருப்பது என சுற்றி வந்து கொண்டிருக்கிறார்.

நாயகி ரெபா மோனிகா ஜான் நன்றாக படித்து கொண்டிருக்கிறார். அமெரிக்கா சென்று வேலை பார்ப்பதுதான் தன்னுடைய லட்சியம் என்று அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

இப்படி அமெரிக்கா போக வேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கும் ரெபா மோனிகா ஜானை பார்த்ததும் காதல் கொள்கிறார் அன்சன் பால்.

ஆனால் ரெபாவோ அன்சனின் காதலை ஏற்க மறுக்கிறார். தன் காதலை ஏற்றுக்கொள்ளும் வரை நான் காத்திருப்பேன் என்று சொல்லி ரெபாவை
தொல்லை செய்யாமல் இருந்து வருகிறார்.

சில நாட்கள் செல்ல, ரெபாவிற்கு அன்சனை பிடித்துவிட அவரும் காதல் வயப்படுகிறார். தனது காதலை அன்சனிடம் சொல்வதற்கு போகிறார் ரெபா. அப்போது இருசக்கர வாகனத்தில் இருவரும் செல்கிறார்கள். அப்படி போகும் போது ஒரு பெரிய விபத்து ஏற்பட்டு இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

அதன் பிறகு என்ன நடந்தது? அவர்கள் உயிர் பிழைத்தார்களா? இல்லையா? அவர்களின் காதல் சேர்ந்ததா? இல்லையா? என்பதே மழையில் நனைகிறேன் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இசையமைப்பாளர் : விஷ்ணு பிரசாத்
ஒளிப்பதிவு : ஜே. கல்யாண்
எடிட்டர் : ஜி.பி. வெங்கடேஷ்
ஆடை வடிவமைப்பாளர் : ஸ்ரீவித்யா ராஜேஷ்
உரையாடல்: விஜி மற்றும் கவின் பாண்டியன்
பாடல் வரிகள் : லலிதானந்த் முத்தழில்
கலை இயக்குனர் : என்.என். மகேந்திரன் சண்டைக்காட்சிகள் : டி.ரமேஷ்
வண்ணம் : ரங்கா
மார்கெடிங் தலைவர் : அஜேஷ் சக்லேச்சா
ஒலி வடிவமைப்பாளர் : மணிகண்டன்
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர் : பழனி கே.ஆனந்த்
ஒப்பனை : ரவி
ஸ்டில்ஸ் : பி.எம். கார்த்திக்
வசன வரிகள் : ரெக்ஸ
விளம்பர வடிவமைப்புகள் : ஷபீர்.ஜே
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா, அப்துல்.ஏ. நாசர்