மாயன் விமர்சனம்

ஃபாக்ஸ் அண்ட் க்ரோ ஸ்டூடியோஸ் ஜெ.ராஜேஷ் கண்ணா தயாரிப்பில், ஜெ.ராஜேஷ் கண்ணா இயக்கத்தில்,
வினோத் மோகன், பிந்து மாதவி, ஜான் விஜய், ஆடுகளம் நரேன், சாய் தீனா, ரஞ்சனா நாச்சியார், கஞ்சா கருப்பு, ராஜா சிம்மன், மரியா, பியா பாஜ்பாயி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் மாயன்.

நாயகன் வினோத் மோகன், ஐடி துறையில் பணியாற்றுகிறார், அமைதியான சுபாவம் கொண்டவர். என்ன நடந்தாலும் எதையும் கண்டு கொள்ளாமல் இருப்பவர்.

13 நாட்களில் உலகம் அழிந்துவிடும்
மாயர்களின் பிள்ளை என்பதால் உனக்கு இதை தெரியப்படுத்துகிறோம். இது ரகசியம், யாரிடமும் சொல்லக் கூடாது”
என்று மின்னஞ்சல் ஒன்று வருகிறது.

இதனை நம்ப மறுக்கும் வினோத் மோகனை சுற்றி பல மர்மமான விசயங்கள் நடக்கத் தொடங்குகிறது. அதனால், தனக்கு வந்த தகவலை நம்புகிறார், உலகம் அழியத்தான் போகிறது என்பதால், தான் செய்ய விரும்பிய அனைத்தையும் தைரியமாக செய்கிறார். வங்கியில் கடன் வாங்கி வீடு வாங்குகிறான்.

கந்து வட்டிக்காரன் சாய் தீனா உட்பட அனைவரையும் அடிக்குகிறார், தனது காதலியான பிந்து மாதவியை உடனே திருமணம் செய்துகொள்கிறார்.
மேலும் போலீஸ் அதிகாரி ஜான் விஜயுடன் சண்டை போடுகிறார்.

13 ஆம் தேதியும் வருகிறது, அவர் எதிர்பார்த்தது போல் உலகம் அழிந்ததா? இல்லையா? அவருக்கு தகவல் அனுப்பிய மாயர்கள் யார்? என்பதை கிராபிக்ஸ் உதவியோடு சொல்லி இருப்பதே ‘மாயன்’ திரைப்படம்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :

எழுத்து & இயக்கம் : ஜெ.ராஜேஷ் கண்ணா​
தயாரிப்பு : ஃபாக்ஸ் அண்ட் க்ரோ ஸ்டூடியோஸ் ஜெ.ராஜேஷ் கண்ணா
இணை தயாரிப்பு : ஜி.வி.கே.எம். எலிபன்ட் பிக்சர்ஸ் டத்தோ கணேஷ் மோகன சுந்தரம்
ஒளிப்பதிவாளர் : கே.அருண் பிரசாந்த்
இசையமைப்பாளர் : எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட்
படத்தொகுப்பு : எம்.ஆர்.ரெஜிஸ்
கலை இயக்குனர் : எ.வனராஜ்
வி.எஃப்.எக்ஸ் : எஸ்.ரமேஷ் ஆச்சார்யா
உடை வடிவமைப்பு : நிவேதா ஜோசப்
ஒலி வடிவமைப்பு : யுகேஐ.ஐயப்பன்
சண்டைப்பயிற்சி : தினேஷ் காசி
நடனம் : நந்தா கோபால்
கலரிஸ்ட் : எஸ்.சிவசந்தோஷ்
ஸ்டில்ஸ் : ஹரி
மக்கள்த்தொடர்பு : வெங்கடேஷ்