தாய்மாமாவான இமான் அண்ணாச்சியுடன் ஊர் ஊராக சென்று துணி விற்கும் தொழிலை செய்து வருகிறார் நாயகன் அப்துல்லா. இவர்கள் இருக்கும் அதே ஊரில் சாமியாராக இருக்கும் கே.ஆர்.விஜயாவிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு செல்லும் இவர்களிடம், வியாபாரம் சிறப்பாக நடக்கும், ஆனால், எந்தப் பெண்ணையும் தொடக்கூடாது என்று கூறுகிறார் கே.ஆர்.விஜயா. சாமியார் சொன்னபடி வியாபாரம் சிறப்பாக நடைப்பெற்று வரும் நிலையில், நாயகி சாரிகாவை பார்க்கிறார். பார்த்தவுடனே காதல் வயப்படுகிறார்.
ஆனால், சாரிகாவோ ஒரு ஆவி என்று தெரியாமலேயே காதலித்து வருகிறார். இந்நிலையில், பிரகாஷ் பல பெண்களிடம் பேசுவதை பார்க்கும் ஊர்மக்கள், அவரை அடித்து கொன்று விடுகிறார்கள். பிரகாஷின் பிணத்தை வைத்துக் கொண்டு இரவில் அழுதுக் கொண்டு ஊர் மக்களை அச்சுறுத்தி வருகிறார் சாரிகா. இந்நிலையில், மற்றொரு நாயகியான ஜோதிஷா தனியார் தொலைக்காட்சியில் பணி புரிந்துக் கொண்டு, ஆவி, இருக்கிறதா? இல்லையா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
ஊர் மக்கள் பலரும் அந்த தொலைக்காட்சி நிறுவனத்திற்கு போன் செய்து, எங்கள் ஊரில் ஒரு ஆவி இருப்பதாக அழைக்கிறார்கள். இதைப்பற்றி அறிய கேமராமேன் அப்துல்லா (சிவா) உடன் அந்த ஊருக்கு வருகிறார். தன்னுடைய காதலன் பிரகாஷ் உருவம் போல் இருக்கும் சிவாவை பார்த்தவுடன் அவரை அடைய நினைக்கிறார் சாரிகா. இறுதியில், ஆவியாக இருக்கும் சாரிகாவின் ஆசை நிறைவேறியதா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்