வி கிரியேஷன்ஸ் & கிச்சா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், விஜய் கார்த்திகேயா இயக்கத்தில், கிச்சா சுதீப், வரலட்சுமி சரத்குமார், இளவரசு, சம்யுக்தா ஹொர்னாட், சுக்ருதா வாக்லே, சுனில், சரத் லோகிதாஸ்வா, வம்சி கிருஷ்ணா, ஆடுகளம் நரேன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் மேக்ஸ்.
காவல்நிலையத்தில் ஒருநாள் இரவு நடக்கும் கதை தான் மேக்ஸ் படம்.
காவல்துறையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு வேறு ஊருக்கு ட்ரான்ஸ்பரில் வரும் கிச்சா சுதீப் மறுநாள் காலையில் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பொறுப்பு எடுக்க வேண்டும்.
ஆனால் அதற்கு முன்பாகவே, முதல் நாள் குடித்துவிட்டு போதையில் கார் ஒன்று விபத்துக்குள்ளாக அதனை விசாரிக்கப் போகும் பெண் போலீஸ் அதிகாரி மீது அந்த காரில் வந்த இரண்டு இளைஞர்கள் அத்துமீற, அவர்களை அடித்து துவம்சம் செய்து கைது செய்து சிறையில் அடைக்கிறார் கிச்சாசுதீப்.
அந்த ஸ்டேஷனில் இருக்கும் சக காவலர்கள் அவர்கள் இருவரும் அமைச்சரின் மகன்கள் என்று சொல்ல எதனையும் பொருட்படுத்தாமல் அவர்கள் மீது எஃப் ஐ ஆர் போட சொல்லிவிட்டு சென்று விடுகிறார் கீச்சாசுதீப்.
அமைச்சரின் ஆட்கள் வந்தால் நம்மை காலி செய்து விடுவார்கள் என்று பயந்து அங்கு இருக்கும் காவலர்கள் ஒவ்வொருவராக ஒரு காரணம் சொல்லி சென்று விடுகின்றனர்.
சிறையில் உள்ள இருவரும் சண்டை போட்டுக் கொள்கின்றனர்.
சிறிது நேரத்திற்கு பிறகு அனைத்து காவலர்களும் வர அங்கு சிறையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டு இறந்து கிடக்கின்றனர்.
இதனை அறிந்த கிச்சா சுதீப்பும் அதிர்ச்சி அடைகிறார் இருப்பினும் சூழ்நிலையை சமாளிக்க முடிவெடுக்கிறார். அமைச்சரின் மகன்கள் கைது செய்யப்பட்ட தகவல் தெரிந்து ரவுடிகள் காவல் நிலையம் தேடி வருகின்றனர்.
கிச்சாசுதீப் இந்த பிரச்சனையை எப்படி சமாளித்தார்? அந்த இரண்டு இளைஞர்களும் எப்படி இறந்தனர்? என்பதை ஒரே இரவில் சொல்லும் படம் மேக்ஸ்.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு : வி கிரியேஷன்ஸ் & கிச்சா கிரியேஷன்ஸ்
இயக்குனர் : விஜய் கார்த்திகேயா
ஒளிப்பதிவாளர் : சேகர் சந்திரா
இசையமைப்பாளர் : பி. அஜனீஷ் லோக்நாத்
தயாரிப்பு வடிவமைப்பாளர் : சிவகுமார் ஜே.
படத்தொகுப்பாளர் : எஸ். ஆர். கணேஷ் பாபு
நிர்வாக தயாரிப்பாளர் : எம். டி. ஸ்ரீராம்
தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் : ஏ இளங்குமரன்
தயாரிப்பு நிர்வாகி : என் மகேந்திரன், சம்பகடமா பாபு கே. எஸ்.
ஆடை வடிவமைப்பாளர் : பாரத் சாகர்
ஆடைகள் : பெருமாள் செல்வம்
ஒப்பனை : நெல்லை வி.சண்முகம்
ஒலிப்பதிவு : டி. உதய் குமார் (நாக் ஸ்டுடியோஸ்)
ஒலி வடிவமைப்பு : டி. உதய் குமார்
ரஞ்சித் வேணுகோபால்
எம். சரவணா குமார்
(சவுண்ட் வைப்)
டிஐ : நாக் ஸ்டுடியோஸ்
எம். பி. சஜய் குமார்
வண்ணக் கலைஞர் : பிரசாத் சோமசேகர்
விஎஃப்எக்ஸ் : அஜாக்ஸ், நாக் ஸ்டுடியோஸ், ஃபைவ்எஃப்எக்ஸ்
படங்கள் : இம்ரான்
டிசைன்கள் : பவன், ரெடோட் டிசைன்ஸ்
மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அஹ்மத்
விளம்பரங்கள் : கே. ஆர். ஜி கனெக்ட்ஸ்
ரேட்டிங் 4.5/5