மாஸ் மஹாராஜா ரவிதேஜா, வம்சி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸின் பான் இந்தியன் ஃபிலிம் டைகர் நாகேஸ்வரராவ் டீசர் ஆகஸ்ட் 17 அன்று வெளியீடு.
மாஸ் மஹாராஜா ரவிதேஜா தனது முதல் பான் இந்தியா திரைப்படமான டைகர் நாகேஸ்வர ராவ் படத்தை வம்சி இயக்குகிறார். பிரபல தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால், அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் பேனரின் கீழ் சிறந்த தயாரிப்பு மற்றும் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுடன் மிகப்பெரிய பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளார். அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் தயாரிப்பில் பான் இந்தியா பிளாக்பஸ்டர்கள்- தி காஷ்மீர் பைல்ஸ் மற்றும்
கார்த்திகேயா 2 ஆகிய படங்களுக்குப் பிறகு வரும் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளன. குறிப்பாக இப்படத்தின் க்ளிம்ப்ஸ் ஒரு தனித்துவமான முறையில் வெளியான இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தீவிரமடைந்தது.
இப்படத்தின் டீசர் ஆகஸ்ட் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது. டைகர் நாகேஸ்வர ராவின் வருகையின் அடையாளமாக, டீஸர் போஸ்டரில் அவர் பெரிய ஆக்ஷனில் அதகளம் செய்துள்ளார் என்பது உறுதியாகிறது.
இயக்குனர் வம்சி தனது தயாரிப்பாளரின் முழுமையான ஆதரவைப் பெற்றுள்ளார். ரவிதேஜாவுக்கு அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் இது. கதை உலகளாவிய ஈர்ப்பைக் கொண்டிருப்பதால், தயாரிப்பாளர்கள் அதை பான் இந்தியா அளவில் வெளியிடுகிறார்கள்.
ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க, ஆர் மதி ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைத்துள்ளார். ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுதியுள்ளார், மயங்க் சிங்கானியா இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.
தசரா பண்டிகைக்கு அக்டோபர் 20ஆம் தேதி வெளியாகும் இப்படத்தில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
நடிகர்கள்: ரவி தேஜா, நூபுர் சனோன், காயத்ரி பரத்வாஜ் மற்றும் பலர்
தொழில்நுட்பக் குழு:
எழுத்தாளர், இயக்குனர்: வம்சி
தயாரிப்பாளர்: அபிஷேக் அகர்வால்
பேனர்: அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ்
வழங்குபவர்: தேஜ் நாராயண் அகர்வால்
இணை தயாரிப்பாளர்: மயங்க் சிங்கானியா
வசனம்: ஸ்ரீகாந்த் விசா
இசையமைப்பாளர்: ஜி.வி.பிரகாஷ் குமார்
DOP: ஆர் மதி
தயாரிப்பு வடிவமைப்பாளர்: அவினாஷ் கொல்லா
PRO : யுவராஜ்