விகர்ணன் அசோக் இயக்கத்தில், கவின், ஆண்ட்ரியா ஜெரமையா, ருஹாணி ஷர்மா, சார்லி, ரமேஷ் திலக், கல்லூரி வினோத், அர்ச்சனா சந்தோக், ரெடின் கிங்ஸ்லீ, பவன், ஆடுகளம் நரேன், சுப்ரமணியம் சிவா, ரோகித், டெனிஸ், வெங்கட் பேட்டரி, மகாலட்சுமி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் மாஸ்க்.
கவின் பெரிய பெரிய முதலாளிகள் மட்டுமில்லாமல் பலரின் அந்தரங்கங்களை மறைமுகமாக விசாரித்து அவர்களைப் பற்றிய விவரங்களை எதிர் தரப்பிடம் கொடுக்கும் டிடெக்டிவ் வேலை செய்து வருகிறார்.
ஆண்ட்ரியா பெற்றோர்களாலும் உடன்பிறந்தவர்களாலும் கைவிடப்பட்ட சிறுமிகளுக்கு அடைக்கலம் கொடுத்து, வசதியான முறையில் அவர்களை ஆடம்பரமாக வளர்த்து பெரிய பெரிய அரசியல்வாதிகள் மற்றும் பணக்காரர்களுக்கு பாலியல் ரீதியாக அவர்களை அனுப்பி அதனை வீடியோ எடுத்து வைத்து அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் வேலையை செய்து வருகிறார்.
ஆண்ட்ரியாவிடம் அரசியல்வாதி பவன் பல கோடி பணத்தை தொகுதிகளுக்கு பிரித்துக் கொடுப்பதற்காக கொடுக்கிறார்.
அதற்காக அந்த பணத்தை தன்னுடைய சூப்பர் மார்க்கெட்டில் வைத்து அதற்கான வேலையை ஆரம்பிக்க முடிவு செய்கிறார். அந்த நேரத்தில் எம் ஆர் ராதா மாஸ்க் அணிந்த ஒரு கும்பல் அந்த பணத்தை மொத்தமாக திருடி சென்று விடுகிறது. எதிர்பாராத விதமாக அந்த பணத்தின் சிறு பகுதி கவினுக்கும் கிடைக்கிறது.
இது தெரியாமல் அந்த பணத்தை கொள்ளை அடித்த கும்பலை கண்டுபிடிக்க கவின் இடம் சொல்கிறார். அந்த பணத்தை கொள்ளையடித்தது யார் எதற்காக கொள்ளையடித்தார்கள் கவின் அதனை கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே மாஸ்க் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்: தி ஷோ மஸ்ட் கோ ஆன் ( TSMGO ) & பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ்
எழுத்து & இயக்கம்: விகர்ணன் அசோக்
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு: RD ராஜசேகர்
படத்தொகுப்பு: R ராமர்
கலை இயக்கம்: ஜாக்கி, எம். விஜய் அய்யப்பன்
பாடல் வரிகள்: கருமாத்தூர் மணிமாறன், கேபர் வாசுகி
நடன அமைப்பு: அசார், விஜி
சண்டைக் காட்சிகள்: பீட்டர் ஹைன், விக்கி
ஆடை வடிவமைப்பு: பூர்த்தி பிரவீன், விபின் ஷங்கர்
தயாரிப்பாளர்கள்: ஆண்ட்ரியா ஜெரமையா & SP. சொக்கலிங்கம்
மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்

