அருவர் பிரைவேட் லிமிடெட் சார்பில், வெங்கடேசன் தயாரிப்பில், V கஜேந்திரன் இயக்கத்தில், விதார்த், ரக்ஷனா, அருள் தாஸ், மாறன், தினந்தோறும் நாகராஜ், சரவண சுப்பையா ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் மருதம்.
விவசாயியாக இருக்கும் விதார்த் மனைவி ரக்னாவுடன் மற்றும் 4 வயது மகனுடன் தன்னுடைய நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து அதில் வரும் வருமானத்தை வைத்து மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
மகனை தனியார் பள்ளியில் ஆங்கில வழி கல்வியில் படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்து தன்னுடைய நிலத்தை அடமானம் வைத்து பணம் வாங்கி பள்ளியில் சேர்க்கும் முயற்சியில் இருந்து வருகிறார்.
இந்த சூழ்நிலையில், விதார்த்தின் நிலத்தை வேறொருவர் சொந்தம் கொண்டாடி அதற்கு வேலி போடுகிறார். தனியார் வங்கியின் ஏலத்தின் மூலமாக இந்த நிலத்தை வாங்கியதாக அவர் சொல்ல அதிர்ச்சி அடைகிறார் விதார்த்.
ஒன்றும் புரியாமல் அந்த வங்கிக்கு போய், விதார்த் விசாரிக்க, உங்கள் அப்பா ஆறு வருடத்திற்கு முன்பு நிலத்தை வைத்து லோன் வாங்கிவிட்டு, ஆறு மாதங்கள் தவணை கட்டி இருப்பதாகவும் அதற்கு பிறகு கட்டவில்லை என்றும், வீட்டிற்கு கடிதம் அனுப்பியும் எந்த பதிலும் இல்லாததால் நாங்கள் ஏலம் விட்டு விட்டோம் என்று கூறுகிறார்கள்.
இதனைக் கேட்டு மேலும் அதிர்ச்சி அடைந்த விதார்த் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறார்.
ஒரு கட்டத்தில் சுதாரித்து அதனைப் பற்றி விசாரிக்க ஆரம்பிக்க போலி பத்திரத்தின் மூலம் வங்கியில் மோசடி செய்து பணம் பெற்றது தெரிய வருகிறது.
அதன் பிறகு விதார்த் அந்த நிலத்தை வாங்க என்னவெல்லாம் செய்தார்? தன்னுடைய நிலத்தை மீண்டும் பெற்றாரா? இல்லையா? என்பதே மருதம் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு நிறுவனம் : அருவர் பிரைவேட் லிமிடெட்
தயாரிப்பு : சி. வெங்கடேசன்
எழுத்து & இயக்கம் : V கஜேந்திரன்
இசை : என்.ஆர். ரகுநந்தன்
ஒளிப்பதிவு :அருள் K சோமசுந்தரம்
எடிட்டிங் : B சந்துரு
ஒலி : T உதயகுமார்
DI : வசந்த்
கலை : தாமு MFA
பி ஆர் ஓ : A. ராஜா

