மார்கழி திங்கள் விமர்சனம்

வெண்ணிலா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில், இயக்குனர் சுசீந்திரன் தயாரிப்பில், மனோஜ்.கே.பாரதிராஜா இயக்கத்தில், இயக்குனர் பாரதிராஜா, ஷ்யாம் செல்வன், ரக்ஷனா, நக்ஷா சரண், சுசீந்திரன், அப்புக்குட்டி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம்
மார்கழி திங்கள்.

நாயகன் ஷ்யாம் செல்வனும், நாயகி ரக்‌ஷனாவும் பள்ளியில் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள். முதல் மதிப்பெண் எடுப்பதில் இருவருக்கும் கடுமையான போட்டி ஏற்படுகிறது, அந்த போட்டியே ஒரு சமயத்தில் இருவருக்கும் காதல் ஏற்பட காரணமாகிறது. பள்ளி படிப்பு முடிந்ததும் தன்னுடைய காதலைப் பற்றி தாத்தா பாரதிராஜாவிடம் ரக்‌ஷனா சொல்கிறார்.

பேத்தியின் காதலுக்கு பாரதி பாரதிராஜா ஓகே சொன்னாலும் கல்லூரி படிப்பு முடிந்த பிறகு தான் திருமணம் என்று சொல்லிவிட்டு, அதுவரை ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல், பேசிக்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று சத்தியம் வாங்கி கொள்கிறார்.

அதன்படி, இருவரும் வெவ்வேறு கல்லூரியில் படிக்க செல்கின்றனர் கல்லூரி படிப்பு முடிந்ததும் இவர்களின் காதல் ஒன்று சேர்ந்ததா? இல்லையா? என்பதே மார்கழி திங்கள் படத்தோட மீதிக்கதை.

தொழில் நுட்ப கலைஞர்கள்:

இசை : இசைஞானி பாரதிராஜா
ஒளிப்பதிவு : வாஞ்சிநாதன் முருகேசன்
எடிட்டர் : தியாகு
கலை : சேகர்
வசனம் : செல்ல செல்லம்
சண்டை : தினேஷ் காசி
நடனம் : ஷோபி பால்ராஜ்
உடை : வாசுகி பாஸ்கர்
இணை இயக்குனர் : ராஜ பாண்டியன், தயாரிப்பு மேற்பார்வை : சுவாமிநாதன், கிரியேடிவ் புரொடியூசர் : துரை
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்