ஃபிலியா மீடியா எண்டர்டெயின்மென்ட் மற்றும் குவியம் மீடியா வொர்க்ஸ் சார்பில், ரகு யெல்லுரு, ரமேஷ் பஞ்சாங்குலா, ஜனார்தன் சௌத்ரி, ராகோ.யோகேந்திரன் தயாரிப்பில், ராகோ.யோகேந்திரன் இயக்கத்தில், ரக்ஷன், மலினா, தீனா, ராகுல், ஸ்வேதா வேணுகோபால், முத்தழகன், மெல்வின் டென்னிஸ், முனீஷ்காந்த், அருண் குரியன், அகிலா, ஆஷிகா காதர், நாடலியா லூர்ட்ஸ், விஷ்வத் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் மறக்குமா நெஞ்சம்.
கன்னியாகுமரியில் உள்ள குளைச்சல் தனியார் பள்ளியில், 2008ம் ஆண்டு ப்ளஸ் டூ எழுதிய மாணவர்களின் மதிப்பெண்ணில் முறைகேடு உள்ளதாக மற்றொரு தனியார் பள்ளி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு 2018 இல் வெளியாகிறது.
அதனால் அந்த பள்ளியில் ப்ளஸ் டூ படித்த அனைவரும் மீண்டும் பள்ளிக்கு வந்து படித்து மூன்று மாதத்தில் ப்ளஸ் டூ மறு தேர்வு எழுத வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
ப்ளஸ் டூ படித்த அனைவரும் திரும்ப பள்ளிக்கு வந்து மூன்று மாதத்தில் ப்ளஸ் டூ மறு தேர்வு எழுத வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
ஆகையால், அந்த பள்ளியில் படித்த மாணவர்கள் ரக்ஷன், மலினா, ராகுல், ஸ்வேதா வேணுகோபால், முத்தழகன், தீனா என எல்லோருக்கும் மறுதேர்வு எழுத வேண்டும் என்று அழைப்பு வருகிறது.
கடந்த பத்து வருடங்களில், எல்லோரும், அவரவர் விருப்பப்படி வேலை செய்து கொண்டும், திருமணம் செய்து கொண்டும் வாழ்ந்து வருகின்றனர். மீண்டும் பள்ளிக்கு வந்து தேர்வு எழுத வர வேண்டும் என்ற நிலையில் வேறு வழியின்றி அந்த பள்ளிக்கு தேர்வு எழுத வருகின்றனர். ரக்ஷன் மலினா வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது சொல்லாமல் விட்ட காதலை இப்போது சொல்லிவிட வேண்டும் என்று தவிக்கிறார்.
பள்ளிக்கு வந்த மூன்று மாதங்களில் ப்ளஸ் டூ மறுதேர்வை எழுதினார்களா? ரக்ஷன் மலினாவிடம் காதலை சொன்னாரா? மலினா ரக்ஷன் காதலை ஏற்றுக் கொண்டாரா? இல்லையா? என்பதே மறக்குமா நெஞ்சம் படத்தோட மீதி கதை
தொழில் நுட்ப கலைஞர்கள்
ஒளிப்பதிவாளர் : கோபி துரைசாமி, இசை : சச்சின் வாரியர் படத்தொகுப்பாளர்கள் : பாலமுரளி, ஷஷாங்க் மாலி
கலை இயக்குனர் : பிரேம் கருந்தமலை,
பாடல் வரிகள் : தாமரை
ஆடை வடிவமைப்பாளர் : ரம்யா சேகர்
இணை திரைக்கதை : அக்ஷய் பூலாக்
இணை வசனம் : பிரசாந்த் எஸ்.தீனா
ஒலி வடிவமைப்பு : சுகுமார் நலகொண்டா, ஸ்ரீகாந்த் சுந்தர் (தி சவுண்டஹாலிக்ஸ்)
ஒலி கலவை : ஜெய்சன் ஜோஸ் (நான்கு பிரேம்கள்)
வண்ணக்கலைஞர் : வீரராகவன்,
ஆடைகள் : நரேஷ்
மேக்கப் : ரவி
பப்ளிசிட்டி டிசைன் : ஹீட்ஸ் ஆட் டெக் சொல்யூஷன்ஸ்
வடிவமைப்பாளர்கள் : பிரிதிவி ராஜ், சுமன், முருகவேல், ஸ்ரீஹரி சங்கர்
டப்பிங் ஸ்டுடியோ : க்ரான்டா ராம்மோ சவுண்ட் நிறுவனம்
தயாரிப்பு நிர்வாகி : செல்வா சண்முகம்
கிரியேட்டிவ், தயாரிப்பாளர் : ஸ்ரீPராம் ஆனந்தசங்கர்
நிர்வாக தயாரிப்பாளர் : அனிருத் வல்லப்
மக்கள் தொடர்பு : சதீஷ் குமார்