தம்பி ராமையா எந்த வேலைக்கும் போகாமல் தந்தையின் சொத்தை விற்று குடும்பம் நடத்தி வருகிறார். வீட்டு செலவுக்கு கதவு, ஜன்னல்களை விற்று செலவு செய்கிறார். மகன் உமாபதியும் அப்பாவை போல எந்த வேலைக்கும் போகாமல் மாமா விவேக் பிரசன்னாவுடன் ஊர் சுற்றி வருகிறார்.
உமாபதியின் முறை பெண்ணான நாயகி மிருதுளாவை பெண் கேட்டு ஜெயப்பிரகாஷ் வீட்டுக்கு செல்கிறார் தம்பி ராமையா. வேலைக்கு போகாமல் ஊதரியாக ஊர் சுற்றும் உமாபதிக்கு பெண் தர முடியாது என்று அவமான படுத்துகிறார் ஜெயப்பிரகாஷ். அவமானத்தால் கோபமாகும் உமாபதி தொழிலதிபராகி மிருதுளாவை திருமணம் செய்வேன் என்று சவால் விட்டு செல்கிறார்.
மிருதுளாவும் உமாபதியை விரும்புகிறார், உமாபதி கோழி பண்ணை வைக்கப்போவதாக மிருதுளாவிடம் சொல்ல, மிருதுளவோ காற்றாலை வைக்கலாம் என்று யோசனை சொல்வதோடு அதற்கு பணம் ஏற்பாடு செய்ய வழிகளையும் சொல்கிறார். வங்கியில் பாதி பணமும், பொது மக்களிடம் அவர்களையும் பங்குதாரர்களாக்கி பணம் வசூல் செய்து காற்றாலை வைக்க தயராகி வருகிறார். இச்சமயத்தில் மொட்டை ராஜேந்திரன் பணத்தை திருடி சென்றுவிடுகிறார்.
எதற்க்காக மொட்டை ராஜேந்திரன் பணத்தை திருடுகிறார்? பணம் திரும்ப கிடைத்ததா? காற்றாலை அமைத்தாரா? மிருதுளாவை திருமணம் செய்தாரா? என்பதே மீதிக்கதை.உமாபதி நன்றாக நடித்துள்ளார், தனது நடனத்தால் அனைவரையும் கவருகிறார். மிருதுளா துறுதுறு அழகு பெண்ணாக வந்து ரசிக்க வைக்கிறார். தம்பி ராமையா பொறுப்பற்ற அப்பாவாக நடித்துள்ளார். சமுத்திரக்கனி சிறப்பு தோற்றத்தில் வந்து செல்கிறார்.
மணியார் குடும்பம் பொறுப்பற்ற அப்பா மகனுக்கான பாடம்
இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்