டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், செல்வராகவன், குஷி ரவி, ஆர் எஸ் சதீஷ், கௌசல்யா, மைன் கோபி, ஓர் ஜி மகேந்திரன், லிர்த்திகா, சேலம் தீபக் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் மனிதன் தெய்வமாகலாம்.
நாயகன் செல்வராகவன் வசிக்கும் கிராமத்தில் சாலை வசதி இல்லாமல் இருக்கிறது. அங்கு அவர் நுங்கு வியாபாரம் செய்து வருகிறார்.
ரொம்ப நாட்கள் திருமணம் ஆகாமல் இருக்கும் அவருக்கும், நாயகி குஷி ரவிக்கும் திருமணம் நடக்கிறது.
தன்னை விரும்பி திருமணம் செய்து கொண்ட மனைவியை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து பலரிடம் கடன் வாங்கி ஒரு நெடுஞ்சாலையில் ஒரு சிறிய உணவகத்தை ஆரம்பிக்கிறார்.
இவர்களைப் போல் ஒரு கணவன் மனைவி இல்லை என்று சொல்லும் அளவிற்கு செல்வராகவனும் குஷிரவியும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் சமயத்தில் குஷி ரவி திடீரென்று தற்கொலை செய்து கொள்கிறார்.
தன்னுடைய மனைவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று செல்வராகனுக்கு தெரிய வருகிறது.
குஷிரவி தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன? எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? அதை தெரிந்து கொண்ட செல்வராகவன் அதற்கு காரணமானவர்களை என்ன செய்தார்? என்பதே மனிதன் தெய்வமாகலாம் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம் : டென்னிஸ் மஞ்சுநாத்
ஒளிப்பதிவு : ரவி வர்ம்
இசை : ஏ.கே.பிரியன்
எடிட்டர் : தீபக்.எஸ்
கலை : பாக்கியராஜ் வெள்ளையன்
ஸ்டண்ட்ஸ் : மான்ஸ்டர் முகேஷ்
பாடல் வரிகள் : விக்னேஷ் ராமகிருஷ்ணா, முவி, எஸ்.வி.மலை
மக்கள் தொடர்பு : ரேகா
தயாரிப்பு : விஜய சதீஷ்


