மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வெளியிட்ட கூத்தன் அறிமுக பாடல்.
தயாரிப்பாளர் நீல்கிரீஸ் முருகன் அவர்களின் நீல்கிரீஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புத்தம் புதிய திரைப்படம் கூத்தன். சினிமாவை பின்னனியாக கொண்டு இந்தப்படம் உருவாகியுள்ளது.
சினிமாவில் நடிகர்கள் பின்னால் நடனமாடும் ஜீனியர் ஆர்ட்டிஸ்ட்களின் வாழ்வியலை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை எழுதி இயக்குகிறார் A.L வெங்கி. அறிமுக நாயகன் ராஜ்குமார், அறிமுக நாயகிகள் ஸ்ரிஜிதா, சோனால், கீரா, ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
இவர்களுடன் (பிரபுதேவா தம்பி) நாகேந்திர பிரசாத், விஜய் டிவி முல்லை, கோதண்டம்,இயக்குநர் பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, ஜீனியர் பாலையா, கவிதாலயாகிருஷ்னன், ஶ்ரீரஞ்சனி, பரத் கல்யாண், ராம்கி, கலா மாஸ்டர் என ஒருதிரையுலக பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.
இந்தப்படத்தில் பாலாஜி இசையமைக்கிறார். ஒளிப்பதிவு மாடசாமி,படத்தொகுப்பு பீட்டர் பாபியா, கலை சி.ஜி.ஆனந்த், நடனம் அசோக் ராஜா,சுரேஷ், நிர்வாக தயாரிப்பு மனோஜ் கிருஷ்ணா பணிபுரிந்துள்ளனர்.
இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பிரபல நடிகர் இளைய திலகம் பிரபு அவர்கள் வெளியிட்டார்.
படத்தினையும் படக்குழுவையும் இளைய திலகம் பிரபு வெகுவாக பாரட்டினார்.
இந்நிலையில் கூத்தன் படத்தின் அறிமுகப்பாடலை மக்கள்செல்வன் விஜய்சேதுபதி அவர்கள் வெளியிட்டார். தனது அலுவலகத்தில் படத்தின் தயாரிப்பாளர் நீல்கிரீஸ் முருகன், அறிமுக நாயகன் ராஜ்குமார்,இசையமைப்பாளர் பாலாஜி ,பாடகர் வேல்முருகன், நிர்வாக தயாரிப்பாளர் மனோஜ் கிருஷ்ணா ஆகியோரை சந்தித்தார்.
தயாரிப்பாளர் நீல்கிரீஸ் முருகன் மற்றும் அறிமுக நாயகன் ராஜ்குமார் மக்கள்நாயகன் விஜய்சேதுபதிக்கு பூன்கொத்து, பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
படத்தின்கதையையும் ஃபர்ஸ்ட் லுக், சிங்கிள் ஆகியவற்றை பார்த்த விஜய்ச்சேதுபதி மிகவும் கவரப்பட்டு படக்குழுவை பாராட்டினார். அறிமுக நாயகன் ராஜ்குமாரின் நடிப்பை பாராட்டியவர், இந்தப்பாட்டில் டாண்ஸ் ஆடியது நீங்களா என ஆச்சர்யப்பட்டார்.
அட்டகாசமாக ஆடியுள்ளீர்கள். நிறைய கற்றுக்கொள்ளுங்கள் எவ்வளவு கற்றாலும் சினிமாவிற்கு பத்தாது. பல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடியுங்கள். சிறப்பாக வருவீர்கள் எனவாழ்த்தினார். மேலும் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் கூத்தன் படத்தின் அறிமுகப்பாடலான “கூத்தனம்மா கூத்தன், கூத்தனம்மா கூத்தன்” பாடலை அறிமுகம் செய்தார்.
பாலாஜி இசையில் வேல்முருகன் பாடியுள்ள இந்தப்பாடல் அனைவரையும் கவரும் வகையில் உள்ளதாகவும் கூறினார். கூடிய விரைவில் அனைத்து மக்களின் உள்ளங்களை கவர வரவிருக்கிறது கூத்தன்.