சென்னையில் முதல்முறையாக திருநங்கைகள், புர்கா அணிந்த பெண் ஓட்டுனர்கள் இயக்கும் ஆட்டோ சேவை துவங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இளவரசி ஷெய்கா ஹெண்ட் பைசல் அல் குவாஸ்மி சேவையை துவக்கிவைத்தார். இசையமைப்பாளர் ஜிப்ரான், இந்தியாவின் பசுமை மனிதர் அப்துல் கனி, மக்கள் ஆட்டோ முதன்மை செயல் அலுவலர் யாஸ்மீன் ஜவஹர் அலி, மக்கள் ஆட்டோ ஆலோசகர் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
மக்கள் ஆட்டோ சேவையில் பெண் ஓட்டுனர்கள், திருநங்கை ஓட்டுனர்கள், புர்கா அணிந்த பெண் ஓட்டுனர்கள், ஆண் ஓட்டுனர்கள் உள்ளனர். தேவையான ஓட்டுனர்களை தேர்வு செய்து சவாரி செய்யும் வசதியை மக்கள் ஆட்டோ வழங்குகிறது.
எஸ்.எம்.எஸ். மூலம் OTP பெற்று ஆட்டோவில் பயணிக்கலாம்.
மொபைல் ஆப் மூலமாகவும் புக்கிங் செய்யலாம். நேரடியாக கால் செண்டருக்கு 044 – 43214321 என்ற எண்ணுக்கு போன் செய்தும் பயணிக்கலாம்.
M ஆட்டோ ஆப்பில் அவசரகால உதவிக்கு தொடர்புகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி, அலுவலகம் செல்வோர், பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது. முழுமையான பாதுகாப்பான பயணத்தை M ஆட்டோவில் பெண்கள் உணரமுடியும். பிளே ஸ்டோரில் இருந்து M Auto App டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
அரசு நிர்ணயித்த மீட்டர் கட்டணம் மட்டுமே மக்கள் ஆட்டோவில் வசூலிக்கப்படும். கூடுதல் கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்படாது.
சென்னை, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, வேளாங்கண்ணி, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்பட தமிழகத்தின் பல முக்கிய நகரங்களில் மக்கள் ஆட்டோ சேவை வழங்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் 50 லட்சம் பயணிகள் மக்கள் ஆட்டோ சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வகையில் மக்களுக்கான சேவையை மக்கள் ஆட்டோ விரிவுபடுத்தி உள்ளது.