தவத்தில் இருக்கும் கணவரை தாம்பத்தியத்திற்கு அழைத்து கருவுற்ற சாபம் பெற்ற பெண்ணின் மகன்களாக அசுரனாக இருக்கும் இரண்யகசுபும் அவரது சகோதரனான இரண்யாட்சன்.
இவர்கள் இருவரும் கடவுள் விஷ்ணுவை தன்னுடைய பரம எதிரியாக நினைத்து அவரோடு சண்டையிடுவதும் அவரை அழிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.
தேவலோகத்தில் இருக்கும் தேவர்களுக்கு கூட இவர்களை கண்டால் பயம்.
ஒரு சூழ்நிலையில் பல பிரச்சனைகளை கொடுத்த இரண்யாட்சனை, வராக அவதாரம் எடுத்து வதம் செய்து விடுகிறார் விஷ்ணு.
தவங்கள் பல புரிந்து மற்றவர்களை தாக்கி அழித்து இரண்யகசுபு எந்த வகையிலும் தான் மரணிக்க கூடாது என்ற வரத்தை பெற்றுக் கொள்கிறார்.
வருடங்கள் ஓடுகிறது, இரண்யகசுபுவிற்கு 4 வயதில் மகன் இருக்கிறான் பெயர் பிரகலாதன். அவன் தீவிர விஷ்ணு பக்தனாக இருக்கிறான். விஷ்ணுவின் மீது அளவு கடந்த அன்பும் வைத்துள்ளான்.
தன்னுடைய மகன் விஷ்ணுவின் பக்தனாக இருப்பது இரண்யகசுபுக்கு பிடிக்காததால் மகன் பிரகலாதனை வெறுத்து அவனுக்கு மரண தண்டனை கொடுக்கிறான்.
பலவிதமான மரண தண்டனைகள் கொடுத்தும் விஷ்ணுவின் ஆசிர்வாதத்தால் பிரகலாதனை அழிக்க முடியவில்லை.
இறுதியில் இரன்யகசுபுவை விஷ்ணு அழித்தாரா? இல்லையா? என்பதே மகா அவதார் நரசிம்மா படத்தோட மீதிக்கதை
ஏற்கனவே தெரிந்த கதையாக இருந்தாலும் இப்பொழுது உள்ள குழந்தைகளுக்கு புரியும் படியாகவும், ரசிக்கும் படியாகவும் அனிமேஷனோட கொடுத்திருக்கிறார்கள் இந்த படத்தை.

