ஜோதிகா டிஸ்கவரி சேனலில் வேலை செய்கிறார். வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்து குடும்பத்தை மட்டும் பார்த்துக் கொள்ளும் பெண்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி ஒரு ஆவணப் படத்தை எடுக்கிறார். அதில் பெண்கள் படும் கஷ்டத்தையும் வேதனையும் உணர்கிறார். இந்நிலையில், தான் திருமணம் செய்து கொள்ளும் காதலனின் தாயான ஊர்வசி வீட்டில் திருமணத்திற்கு முன்பே தங்குகிறார்.
காதலன் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் ஊர்வசிக்கு துணையாக தங்குகிறார். இந்நிலையில், ஊர்வசியிடம் மிகவும் சகஜகமாக பேசி நட்பாக பழகி வருகிறார் ஜோதிகா. ஊர்வசி அவரது பள்ளிப் பருவத்தில் விடுதியில் தங்கி படித்ததாகவும், தன்னுடன் பானுப்பிரியா, சரண்யா பொன்வண்ணன் ஆகிய இரண்டு தோழிகள் இருந்ததாகவும் கூறுகிறார். மேலும் ஒரு பிரச்சனையில் மூன்று பேரும் பிரிந்து விட்டதாகவும் கூறி வருத்தப்படுகிறார். இதை கேட்ட ஜோதிகா, பேஸ்புக் மூலம் பிரிந்த நண்பர்களை தேடி கண்டுபிடித்து, பிரிந்த அதே தேதியில் ஒன்று சேர்க்க ஆசைப்படுகிறார்.
பானுப்பிரியா, சரண்யாவை கண்டுபிடித்த ஜோதிகா, அவர்கள் இருவரும் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழவில்லை என்று அறிகிறார். இவர்களுடைய வாழ்க்கையை வாழவில்லை என்றும் அறிகிறார். இதையடுத்து இவர்கள் மூன்று பேரையும் அழைத்துக் கொண்டு சந்தோஷமாக வாழ வெளியூருக்கு அழைத்து செல்கிறார். இறுதியில், பானுப்ரியா, சரண்யாவை பிரிந்த குடும்பத்தினர்கள், அவர்களின் அருமையை புரிந்துக் கொண்டார்களா? மனம் மாறி அவர்களுக்கு உண்டான மரியாதையை கொடுத்தார்களா? அனைவரும் ஒன்று சேர்ந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்