சென்னை, 10 ஏப்ரல் 2024… வளமான பாரம்பரியத்துடன் 117 ஆண்டுகளாக சமஸ்கிருத மொழி கல்விப்பணியில் அதன் அர்ப்பணிப்புக்காக புகழ்பெற்றிருக்கும் மதிப்புக்குரிய கல்வி நிறுவனமான மெட்ராஸ் சமஸ்கிருத கல்லூரி, நகரில் இன்று அதன் டிஜிட்டல் கேம்பஸ்-க்கான புதிய அடையாளம் அறிமுகம் செய்யப்படுவதை பெருமையுடன் இன்று அறிவித்திருக்கிறது. இக்கல்லூரியின் டிஜிட்டல் கேம்பஸ்-ன் புதிய மைக்ரோசைட்-ன் அறிமுகமும் இந்நிகழ்வில் இடம்பெற்றது. மிகத் தொன்மையான மொழியான சமஸ்கிருதத்தின் மீதான கல்வி மற்றும் அறிவை பரப்புவதற்கு தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்தும் முயற்சியாக இது அமைகிறது.
“சமஸ்கிருதம் மற்றும் அதைக் கடந்து” (Sanskrit and Beyond) என்ற தலைப்பில் நடைபெறுகிற கௌரவமிக்க சமஸ்கிருத மாநாடு நடைபெறும் தருணத்தில் டிஜிட்டல் செயல்பாட்டுக்கான அறிமுக நிகழ்வும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் மிகத்தொன்மையான மொழியின் பன்முக தாக்கத்தை ஆராய்வதற்காக பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபல அறிஞர்களும், நிபுணர்களும் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர். சமஸ்கிருதம் மற்றும் தொழில்நுட்பத்தின் சந்திப்பு, ரோபோடிக்ஸ் செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன சமுதாயத்தில் சமஸ்கிருதத்தின் எதிர்கால செயற்பணி ஆகிய விஷயங்கள் குறித்து இம்மாநாடு விவாதித்த அமர்வுகளை கொண்டிருந்தது. இன்றைய நவீன உலகில் தர்ம சாஸ்திரத்தை பயன்படுத்துவது குறித்து திரு. கிருஷ்ணன் வெங்கட்ராமன் உரையாற்றினார். சட்டத்திற்கான ஒரு கட்டமைப்பாக தர்ம சாஸ்திரத்தின் பொருத்தம் மற்றும் தொடர்பு குறித்து சிறப்பான கண்ணோட்டங்களை அவர் பகிர்ந்துகொண்டார். சமஸ்கிருதத்தில் அறிவியலில் தகவல் பரிமாற்றம் என்ற தலைப்பு மீது திரு. D K ஹரி அவர்களும், டிஜிட்டல் சமஸ்கிருதம் – பேணிக் காத்தல், பகுப்பாய்வு மற்றும் தொழில்நுட்ப யுகத்தில் சமஸ்கிருத சொற்றொடர்களின் பயன்பாடு என்ற தலைப்பு மீது சம்பதானாந்தா மிஸ்ரா அவர்களும் உரையாற்றினர்.
நவீன, அறிவார்ந்த சமூகத்திற்கு சமஸ்கிருதம் இன்றியமையாதது என்று இக்கல்லூரி உறுதியாக நம்புகிறது. பாரம்பரியமான முறையியல்களில் ஆழமான வேர்களைக் கொண்டிருக்கும் இக்கல்லூரி, தீவிர படிப்பின் வழியாக கல்வியை பயிற்றுவிக்கிறது. இதன் மூலம் மரபார்ந்த சமஸ்கிருத படைப்புகள், காவியங்கள் மற்றும் சாஸ்திரங்களில் மிக உயர்ந்த தரநிலைகளை அதன் செம்மை கெடாமல் பேணி வளர்க்கிறது. புதிய அடையாளத்தின் அறிமுகமும், மெட்ராஸ் சமஸ்கிருத கல்லூரியின் முன்னாள் மாணவர்களுக்கான இணையதள தொடக்கமும் சமஸ்கிருத மொழியின் தூய்மை கெடாத உண்மை அறிவை பயிற்றுவிப்பதிலும், பகிர்வதிலும் உலகளவில் தலைமைத்துவ நிலையையும் எட்டுவதற்கான இக்கல்லூரியின் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக திகழ்கிறது. மெட்ராஸ் சமஸ்கிருத கல்லூரியில் பின்பற்றப்படும் கட்டமைப்பு ரீதியிலான திட்டமிட்ட முறைப்படியான கற்றல் பாதை சமஸ்கிருத மொழியைக் கற்கும் பயணத்தை எளிதானதாகவும், ஆனந்தமானதாகவும் ஆக்குகிறது.
அண்ணாசாலையில் அமைந்துள்ள எம்எம்ஏ கலையரங்கத்தில் நடத்தப்பட்ட இம்மாநாடு, சமஸ்கிருத மொழி நுட்பத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக 250-க்கும் அதிகமான மதிப்புமிக்க விருந்தினர்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரியின் நிர்வாக நிர்வாகிகள், அறங்காவலர்கள், ஆசிரியர் குழு உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள், தற்போதைய மாணவர்கள், தொழிலதிபர்கள், ஊடக பிரதிநிதிகள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். தேசிய அளவில் மிகப்பிரபலமான அறிஞர்களையும், கல்வியாளர்களையும் இக்கல்லூரி உருவாக்கியிருக்கிறது. இந்தியாவிலும் மற்றும் வெளிநாடுகளிலும் உயர்கல்வி நிறுவனங்களில் சிறப்பான பதவி பொறுப்புகளை பல முன்னாள் மாணவர்கள் வகிக்கின்றனர்.
2017ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மெட்ராஸ் சமஸ்கிருத கல்லூரியின் டிஜிட்டல் கேம்பஸ், குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது. 10,000-க்கும் அதிகமான தனிநபர்களை உள்ளடக்கிய மாணவர் அடித்தளம் இதற்கு இருக்கிறது. டிஜிட்டல் கற்றல் செயல்தளங்கள், பரவலான ஏற்பையும், வரவேற்பையும் பெற்றிருக்கும் நிலையில் தனது டிஜிட்டல் கேம்பஸை விரிவாக்குவதற்கும் மற்றும் புத்துயிர் ஊட்டுவதற்குமான தேவை இருப்பதை இக்கல்லூரி உணர்ந்தது. அதன் அடிப்படையில் புதிய லோகோ (இலட்சினை)யும் மற்றும் விரிவுபடுத்தப்பட்ட குறிக்கோள் மற்றும் செயற்பணி வாசகங்களையும் உருவாக்கப்பட்டன. சமஸ்கிருத மாநாடு நிகழ்வின்போது இக்கல்லூரியின் டிஜிட்டல் கேம்பஸ்-க்கான புதிய லோகோவும், குறிக்கோள் மற்றும் செயற்பணி அறிக்கைகளும் வெளியிடப்பட்டன. மிகத்தொன்மையான மற்றும் மிகச்சிறந்த மொழியின் மகத்துவத்தை உலகோடு பகிர்ந்துகொள்வதும் இதில் ஆர்வம் கொண்ட மாணவர்களை சென்றடைவதும், அவர்களை ஒருங்கிணைப்பதும் இந்த டிஜிட்டல் கேம்பஸின் நோக்கமாகும். மாணவர்களுக்கு சிறப்பான கற்றல் பாதையை வகுத்துத் தரும் அதே வேளையில் பல்வேறு கல்வித் திட்டங்களையும் இந்த டிஜிட்டல் கேம்பஸ் வழங்குகிறது. இன்றைக்கு, பகிரவும், கற்கவும் ஓரிடத்தில் ஒன்று சேரக்கூடிய மாணவர்களின் மிகப்பெரிய சமூகத்தை இக்கல்லூரி இந்த டிஜிட்டல் கேம்பஸ் மூலம் பெற்றிருக்கிறது.
மெட்ராஸ் சமஸ்கிருத கல்லூரியின் செய்தி தொடர்பாளரான திரு. ரமேஷ் மஹாலிங்கம், இந்நிகழ்வு குறித்து தனது உற்சாகத்தை பகிர்ந்துகொண்டு கூறியதாவது: “சமஸ்கிருதத்தின் செழுமையான பாரம்பரியத்தை பேணி பாதுகாக்கும் அதே வேளையில், நவீன தொழில்நுட்பத்தையும் அரவணைத்து இணைத்துக் கொள்வதில் எமது பொறுப்புறுதியை எமது புதிய அடையாளம் பிரதிபலிக்கிறது. எமது டிஜிட்டல் முன்னெடுப்புகள் வழியாக புவியியல் மற்றும் கலாச்சார வரம்பெல்லைகளைக் கடந்து அனைவருக்கும் சமஸ்கிருத கல்வியை அணுகிப் பெறக்கூடியதாக ஆக்குவதே எமது நோக்கமாகும். மெட்ராஸ் சமஸ்கிருத கல்லூரியில் வெறுமனே ஒரு மொழியை மட்டும் நாங்கள் கற்பிப்பதில்லை; காலங்களையும், யுகங்களையும், எல்லைகளையும் கடந்து வியாபிக்கிற ஞானத்திற்கான கதவுகளை நாங்கள் இங்கு திறந்து வைக்கிறோம். எமது பாரம்பரியம் மற்றும் செழுமையான மரபுரிபைப்பேறின் உதவியோடு தீவிர படிப்பின் பாரம்பரிய முறைகளின் அடிப்படையில் கல்வியை வழங்குவதில் நாங்கள் நம்பிக்கைக் கொண்டிருக்கிறோம். மிகத் தொன்மையான நூல்கள், காவியங்கள் மற்றும் சாஸ்திரங்களில் மிக உயர்ந்த தரநிலைகளை இம்முறையியல் வழியாக வழங்கிவருகிறோம். எமது பாரம்பரியமான வழிமுறைகள் மற்றும் மதிப்புகள் மீது நாங்கள் சமரசம் செய்துகொள்வதில்லை. அவ்வாறு செய்யும்போது தொடர்ந்து மாறிவருகிற உலகிற்கு எமது பாராம்பரிய முறையியல்களின் அடிப்படையில் நாங்கள் பணியாற்றும் மற்றும் எமது கல்வியை வழங்கும் வழிமுறையில் நாங்கள் தொடர்ந்து மேம்பாடுகளை மேற்கொண்டுவருகிறோம்.”
மெட்ராஸ் சமஸ்கிருத கல்லூரியில் ஆழமான அறிவும், நிபுணத்துவமும் கொண்ட கல்வியாளர்களின் வழியாக உண்மையான கற்றல் முறையியல்களின் அடிப்படையில் சிறப்பான ஆராய்ச்சி மற்றும் கட்டமைப்பின்கீழ் உருவான பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. சமஸ்கிருதத்தில் மிகச்சிறந்த அறிஞர்கள் பலரை உருவாக்கியிருக்கும் பெருமையும், 100 ஆண்டுகளுக்கும் மேலாக சமஸ்கிருத கல்வியை வழங்கியிருக்கும் உயர்கல்வி நிறுவனம் என்ற சிறப்பான நற்பெயரையும் இக்கல்லூரி உருவாக்கியிருக்கிறது. சென்னை மாநகரின் பிரசித்திபெற்ற பள்ளிகளில் 10 மற்றும் 11ஆம் வகுப்பில் சமஸ்கிருதம் பயிலும் மாணவர்களும், ஆசிரியர்களும் இந்த சமஸ்கிருத மாநாட்டில் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.
டிஜிட்டல் கேம்பஸ்: www.madrassanskritcollege.com
மெயின் கேம்பஸ்: https://www.madrassanskritcollege.edu.in/
யூடியூப்: https://www.youtube.com/@MadrasSanskritCollege