கார்த்திகேயன் மணி இயக்கத்தில், காளி வெங்கட், சத்யராஜ், ரோஷினி ஹரிபிரியன், ஷெல்லி கிஷோர், விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா, சுனில் சுக்கடா, சாம்ஸ், ஜாங்கிரி மதிமிதா ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் மெட்ராஸ் மேட்னி.
சத்யராஜ் ஒரு கதை ஆசிரியர், அவர் சில கதைகளை எழுதியுள்ளார் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை கதையாக எழுத நினைக்கிறார் அதனால் காலி வெங்கட்டை ஒரு பாரில் சந்திக்கிறார்.
காளி வெங்கட் சென்னையில் ஆட்டோ ஓட்டி சாதாரண வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருகிறார். அவருக்கு மனைவியாக ஷெல்லி கிஷோரும் மகளாக ரோஸ்னியும் மகனாக விஷ்வாவும் இருக்கிறார்கள்.
தான் கஷ்டப்பட்டு இருந்தாலும் குழந்தைகளை நன்றாக வளர்த்து படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்து குழந்தைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறார் காளி வெங்கட்.
மகள் ரோஷினி நன்றாக படித்து பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மகன் விஷ்வாவும் 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்துவிட்டு இன்ஜினியர் படிப்பில் சேர வேண்டும் என்று அதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
தன் அப்பா காலி வெங்கட், ஒவ்வொரு இடத்திலும் தாழ்ந்து பேசுவதையும், அவர்களிடம் இறங்கிப் போவதையும் பிடிக்காத விஷ்வா அப்பா மீது ஒரு கோவத்தோடு இருந்து வருகிறார்.
தன்னுடைய மகள் ரோஷினிக்கு வரன் பார்க்கிறார் காளி வெங்கட் பார்க்கும் எந்த வருடம் ஒத்து வராமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. குடும்ப கஷ்டத்தை மகள் சுமப்பதால் தான் இப்படி வர்ண் அமையாமல் போகிறது என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார் காளி வெங்கட்.
ரோஷினியோ தனது வேலையில் பதவி உயர் பெற்று அமெரிக்கா செல்ல வேண்டும் என்று லட்சியத்தோடு இருக்கிறார்.
விஷ்வா இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தாரா? இல்லையா? அப்பா காளி வெங்கட்டின் ஆசைப்படியே ரோஷினி திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனாரா? இல்லையா? இல்லை அமெரிக்கா சென்றாரா? என்பதே மெட்ராஸ் மேட்னி படத்தோட மீதிக்கதை.
தொழில் நுட்ப கலைஞர்கள்
இயக்கம் : கார்த்திகேயன் மணி
ஒளிப்பதிவு : ஆனந்த் G.K.
இசை : K.C. பால சங்கரன்
தயாரிப்பு : மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ்
மக்கள் தொடர்பு : யுவராஜ்

