ஆர்.கே.நகர் தண்டையார்பேட்டையில் ஓ.பன்னீர் செல்வம் நற்பணி மன்றத்தினை அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி அவைத் தலைவர் மதுசூதனன் திறந்துவைத்து பேசுகையில், தமிழகம் முழுவதும் 256 நற்பணி மன்றங்கள் திறக்க முடிவு செய்யப்பட்டு முதற்கட்டமாக ஆர்.கே.நகர் தொகுதியில் திறந்து உள்ளோம். இதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். ஏழைகளின் குழந்தைகளுக்கு உதவிடும் வகையில் இரவு பாடசாலை மற்றும் எழை, எளிய, நடுத்தர மக்களுக்கு அரசு திட்டங்களை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை டி.டி.வி. தினகரன் கட்சியில் சேர்க்கப்படவில்லை. அவரை கட்சியில் சேர்த்து துணை பொதுச் செயலாளராக தேர்வு செய்ததை ஏற்க முடியாது.ஜெயிலில் இருக்கும் சசிகலா, டி.டி.வி.தினகரனின் பின்னணியில் ஆட்சி செயல்படுவது தமிழக மக்களுக்கு நல்லதல்ல. நிதி அமைச்சர் ஜெயக்குமார் விசுவாசம் இல்லாதவர். அவரது பேச்சுக்கு எல்லாம் கருத்து கூற வேண்டிய அவசியம் இல்லை. அ.தி.மு.க. பொதுச் செயலாளரை தொண்டர்கள் மூலம் தேர்வு செய்ய தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.