ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் – என். ஸ்ரீலட்சுமி பிரசாத் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், விக்ராந்த், ஷபீர் கல்லாரக்கல் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் மதராஸி.
துப்பாக்கி கலாச்சாரத்தை தமிழ்நாட்டுக்குள் கொண்டு வர நினைக்கிறது, ஒரு ரவுடி கும்பல், அதற்காக பல கண்டெய்னர்களில் மிகப்பெரிய அளவிலான ஆயுதங்களை கொண்டு வந்து திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்கிறது.
இதனை தடுத்து நிறுத்தும் முயற்சியில் பிஜு மேனன் தலைமையிலான தேசிய புலனாய்வு அமைப்பு செயல்படுகிறது. இதில் பல உயிர்களும் பனி போகிறது.
மீண்டும் அதனை தடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். இந்த சமயத்தில் காதலி ருக்மணி தன்னை விட்டு பிரிந்து சென்ற சோகத்தில் தற்கொலை செய்துகொள்ள போவதாக சொல்லி சுற்றிக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
இதனை பார்த்த பிஜு மேனன் பயங்கரவாத கும்பலின் திட்டத்தை சிவகார்த்திகேயனை வைத்து முறியடிக்க நினைக்கிறார்.
சிவகார்த்திகேயன் பற்றி விசாரிக்கும் போது, சிவகார்த்திகேயன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அதற்காக 15 ஆண்டுகள் சிகிச்சை பெற்று வந்தவர் என்றும் பிஜு மேனனுக்கு தெரிய வருகிறது.
அதன் பிறகு சிவகார்த்திகேயனை வைத்து பயங்கரவாத கும்பலின் திட்டத்தை பிஜு மேனன் முறியடித்தாரா? இல்லையா? சிவகார்த்திகேயன் மனநிலை எதனால் பாதிக்கப்பட்டது? சிவகார்த்திகேயனை ருக்மணி பிரிந்து சென்றது ஏன்? என்பதே மதராஸி படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம்: ஏ.ஆர்.முருகதாஸ்
இசை: அனிருத் ரவிச்சந்தர்
தயாரிப்பு: ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் – என். ஸ்ரீலட்சுமி பிரசாத்

