ராகுல் மூவி மேக்கர்ஸ் & அபிமன்யு கிரியேஷன்ஸ் சார்பில், ராகுல் தேவா, பிரசாத் ராமச்சந்திரன் தயாரிப்பில், ஏ.ஆர்.ராகவேந்திரா இயக்கத்தில், நாகராஜன் கண்ணன், டெல்லி கணேஷ், மு ராமசுவாமி, டாக்டர் எஸ்.கே. காயத்திரி, சாய் தீனா, ஐஸ்வர்யா ரகுபதி, கார்த்திக் சீனிவாசன், ரேகா குமணன், தினேஷ் செல்லையா, மிருதுளா, பிரகதீஸ்வரன், டி.ஆண்டனி, ஜானகி, முருகன் கோவிந்தசாமி, கே கோபால், மணிகண்டன் வீரமுத்து ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் மாயக்கூத்து.
எழுத்தாளராக இருக்கும் நாயகன் நாகராஜன் கண்ணன், தான் எழுதுகின்ற கதையில், வீட்டு வேலை செய்கின்ற ஏழைப் பெண்ணாக ஐஸ்வர்யா ரகுபதி, நடுத்தர குடும்ப பெண் ரேகா குமணன், நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவியாக மிருதுளா, தாதாவாக சாய் தீனா, என கதாபாத்திரங்களை உருவாக்குகிறார்.
இவர்களின் கதாபாத்திரங்களின் கதையை தன் மனதின் அடிப்படையில் எழுதுகிறார். ஆனால் அவருடைய எண்ணம் அவருடைய நண்பர்கள் தவறு என்று சொன்னாலும் அதனை ஏற்க மறுக்கிறார்.
ஒரு நாள் ஒரு சமயத்தில் இவர் கதையில் உருவாக்கிய கதாபாத்திரங்கள் அவரிடம் நியாயம் கேட்பதாக அவருக்கு தோன்றுகிறது அவர் எங்கு சென்றாலும் அவரை பின் தொடர்கிறார்கள். தங்களுடைய கதையை மாற்றுமாறு கேட்கிறார்கள். அவரை அடித்து துன்புறுத்துகிறார்கள். ஆனால் இது உண்மையா? இல்லை அவரின் கற்பனையா?
உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதனை கதையின் மூலம் எவ்வாறு சரி செய்தார் என்பதே மாயக்கூத்து படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள் :
எழுத்தாளர், இயக்குனர் : ஏ.ஆர்.ராகவேந்திரா
தயாரிப்பாளர்கள் : ராகுல் தேவா, பிரசாத் ராமச்சந்திரன்
இணை தயாரிப்பாளர்கள் : கோபிசந்த் வக்வாலா, சோனியா சபர்வால் ரூ அர்ஜுன் சபர்வால்
தயாரிப்பு நிறுவனங்கள் : ராகுல் மூவி மேக்கர்ஸ் & அபிமன்யு கிரியேஷன்ஸ்
நிர்வாக தயாரிப்பாளர் : ராகுல் தேவா
கிரியேட்டிவ் தயாரிப்பாளர் : சுந்தர் ராம் கிருஷ்ணன்
கதை-திரைக்கதை : ஏ.ஆர்.ராகவேந்திரா & எம்.ஸ்ரீனிவாசன்
வசனங்கள் : நாகராஜன் கண்ணன்
ஒளிப்பதிவாளர் : சுந்தர் ராம் கிருஷ்ணன்
படத்தொகுப்பாளர் : நாகூரான் ராமச்சந்திரன்
இசை : அஞ்சனா ராஜகோபாலன்
பாடல் வரிகள் : நாகராஜன் கண்ணன் & கபேர் வாசுகி
அனிமேஷன் : அதிதி ஹரிகுமார்
கலை இயக்குனர் : கே.பி.நந்து
ஒலி வடிவமைப்பாளர் : துரைசீனு
சண்டைக்காட்சிகள் : எஸ்.ஆர். ஹரிமுருகன்
தயாரிப்பு மேலாளர் : ராஜா பக்கிரிசாமி
டிரெய்லர் எடிட்டர் : அனில் கிருஷ்ணன்
டீசர் எடிட்டர் : எஸ்.வினோத் குமார்
மக்கள் தொடர்பு : ரேகா

