மாரீசன் விமர்சனம்

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில், சுதீஷ் சங்கர் இயக்கத்தில், வடிவேலு, பஹத் பாசில், கோவை சரளா, சித்தாரா, விவேக் பிரசன்னா, ரேணுகா, பி எல் தேனப்பன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் மாரீசன்.

பஹத் பாசில் பாளையங்கோட்டை ஜெயிலில் இருந்து வெளியே வருகிறார். சிறிய சிறிய திருட்டு வேலைகளை செய்து ஜெயிலுக்கு போவதும், வெளியே வந்து மீண்டும் திருட்டு செயலில் ஈடுபடுகிறார். 

ஒரு நாள் இரவில் ஒரு வீட்டிற்குள் திருடுவதற்காக நுழைகிறார். அப்பொழுது அங்கு சங்கிலியால் கட்டப்பட்டு இருக்கும் வடிவேலுவை பார்க்கிறார் பஹத்.

தன்னை இதிலிருந்து அவிழ்த்து விட்டால் பணம் தருகிறேன் என்று கூறுகிறார் வடிவேலு. அதனால் பஹத் பாசிலும் அந்த இரும்பு விலங்கை கழட்டி விடுகிறார். 

ஏடிஎம் போய் பணத்தை எடுத்து பஹத் பாசிலிடம் கொடுக்கிறார் வடிவேலு. வடிவேலுவின்ன் அக்கவுண்டில் லட்சக்கணக்கில் பணம் இருப்பதை தெரிந்து கொண்ட பஹத் பாசில், அந்த பணத்தை கொள்ளை அடிக்க திட்டம் போடுகிறார். 

இந்த சமயத்தில் வடிவேலுக்கு ஞாபக மறதி இருக்கிறது தெரிய வருகிறது. தன்னையே தான் மறந்து போகும் அளவிற்கு ஞாபக மறதி வடிவேலுக்கு இருக்கிறது.

இந்த ஞாபக மறதியை பயன்படுத்தி வடிவேலுவிடமிருந்து பணத்தை எப்படியாவது கொள்ளையடித்து விட வேண்டும் என்று நினைக்கிறார் பஹத்.

தன்னுடைய நண்பன்‌ திருவண்ணாமலையில் இருக்கிறார் அங்கு செல்ல வேண்டும் என்று பஹத்திடம் வடிவேலு சொல்கிறார். 

இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறார்கள். 

இவர்கள் செல்லும் பொழுது ஆங்காங்கே தங்கி செல்கிறார்கள். அந்த சமயத்தில் அடுத்தடுத்து சில கொலைகள் நடந்து வருகிறது. 

கொலைகளை விசாரிக்கும் காவல் அதிகாரியாக கோவை சரளா வருகிறார்.

அந்த கொலைகளுக்கான காரணம் என்ன? அந்த கொலைகளை யார் செய்கிறார்கள்? வடிவேலுவிடமிருந்து பணத்தை திருட வேண்டும் என்ற பஹத் பாசிலின் திட்டம் நிறைவேறியதா? இல்லையா? என்பதே மாரீசன் படத்தோட மீதி கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

இயக்கம் : சுதீஸ் சங்கர்

கதை, திரைக்கதை, வசனம் : வி கிருஷ்ண மூர்த்தி

இசை : யுவன் சங்கர் ராஜா

ஒளிப்பதிவு : கலை செல்வன் சிவாஜி

தயாரிப்பு : சூப்பர் குட் பிலிம்ஸ்

மக்கள் தொடர்பு :  ரியாஸ் கே அகமது & யுவராஜ்