மாண்புமிகு பறை விமர்சனம்

எஸ் விஜய் சுகுமார் இயக்கத்தில், லியோ சிவக்குமார், காயத்ரி ரெமா, ஆரியன், கஜராஜ், ரமா, அசோக் ராஜா, சேரன்ராஜ், காதல் சுகுமார், ஜெயக்குமார் பொன் சுரேஷ், அரங்க குணசீலன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் மாண்புமிகு பறை. 

பறை இசைக் கலைஞர்களாக இருக்கும் லியோ சிவகுமாரும் ஆரியனும் ஆதி பறை என்று ஒரு இசைக் குழுவை நடத்தி வருகிறார்கள். நடத்தி வருவதோடு மட்டுமல்லாமல் அந்த இசையை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுத்தும் வருகிறார்கள். 

ஊர் ஊராக சென்று அந்த இசையை வளர்க்கவும் செய்கிறார்கள். பறையிசை ஒரு அற்புதமான இசை என்றும் அதனை இறப்பு வீட்டில் மட்டுமே பயன்படுத்தி அதை கொச்சைப்படுத்தி விட்டார்கள் என்றும் சொல்லி அதனுடைய பெருமையை வளர்க்க முயற்சி செய்கிறார்கள்.

தாங்கள் எந்த இறப்பு வீட்டிலும் பறையிசைக்க மாட்டோம் என்றும் பிடிவாதமாக இருக்கிறார்கள். பறையசையை மட்டுமல்லாமல் அதனை வாசிக்கும் கலைஞர்களையும் சிலர் இழிவாக பார்க்கின்றார்கள். 

லியோ சிவகுமாருக்கு காயத்ரி ரெமாவை பார்த்தவுடனே காதல் ஏற்பட இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். 

அப்பொழுது காயத்ரி ரெமா வேலை செய்யும் பள்ளியின் ஆண்டு விழாவில் பறை இசை வாசிக்க லியோ சிவகுமார் செல்ல, மற்றொரு ஊரில் நடக்கும் திருவிழாவிற்கு பறை இசை வாசிப்பதற்காக ஆரியனும் அவர்களின் குழுவும் செல்கிறார்கள். 

போன இடத்தில் ஆரியனை கொலை செய்து மரத்தில் தொங்க விட்டு விடுகின்றனர். இதனை பார்த்து கதறும் லியோ சிவக்குமார் ஆரியனை கொலை செய்தவர்களை பழி வாங்கினாரா? இல்லையா? பறை இசை  கலையை வளர்த்தாரா? இல்லையா? என்பதே மாண்புமிகு பறை படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

இயக்கம் : எஸ் விஜயகுமார் 

இசை : தேவா 

தயாரிப்பு : சியா ப்ரொடக்ஷன்ஸ் 

மக்கள் தொடர்பு : சதீஷ் (ஏய்ம்)