வி அவுஸ் புரொடக்ஷன்ஸ் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பலர் நடிக்கும் ‘மாநாடு’ படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் பட்டியலை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நேற்று வெளியிட்டார்.
படத்தின் இசையமைப்பாளர், கதாநாயகி, மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் யார், யார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
மேலும், அடுத்த சில நாட்களில் சில முக்கியமான தகவல்களும் வெளியாகும் என்று தெரிவித்தார்.
படத்தில் சீனியர் இயக்குநர்களும், நடிகர்களுமான பாரதிராஜா, எஸ்ஏ சந்திரசேகர் ஆகியோர் நடிகர்களாக படத்தில் இணைந்துள்ளனர். அவர்களுடன் பிரேம்ஜி, கருணாகரன் ஆகியோரும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார்கள்.
தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம்…
யுவன்ஷங்கர் ராஜா – இசையமைப்பாளர்
ரிச்சர்ட் எம் நாதன் – ஒளிப்பதிவாளர்
பிரவீன் கே.எல் – படத்தொகுப்பாளர்
ராஜீவன் – தயாரிப்பு வடிவமைப்பாளர்
ஸ்டன்ட் சில்வா – சண்டைப் பயிற்சி
சேகர் – கலை இயக்குனர்
வாசுகி பாஸ்கர் – ஆடை வடிவமைப்பாளர்
டியூனி ஜான் – டிசைனர்
ஜான் – மக்கள் தொடர்பாளர்
படம் பற்றி இயக்குநர் வெங்கட் பிரபு கூறியதாவது, சிம்பு முதல் முறையாக இஸ்லாமிய இளைஞராக நடிக்கிறார். இன்னும் முக்கியமான நடிகர் படத்தில் இணைய உள்ளார். விரைவில் அவர் பற்றிய தகவல் வெளியிடப்படும்.
இந்நேரத்தில் ரசிகர்கள் சிம்புவின் கேரெக்டர் பெயரை தேர்ந்தெடுக்கவேண்டும்.
நாங்கள் கதையோடு சரியாகப் பொருந்திப் போகும் பெயரை தேர்வு செய்வோம். அந்த பெயரை தேர்வு செய்து அனுப்புபவர் ஒரு நாள் முழுக்க மாநாடு படப்பிடிப்புத் தளத்தில் எங்களோடிருக்கலாம் என அறிவித்துள்ளார். விரைவில் படப்பிடிப்புத் தளத்திற்கு செல்லவிருக்கிறது குழு என்றார்.