பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில், சூரி, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லக்ஷ்மி, சுவாசிகா, பாபா பாஸ்கர், பால சரவணன், மாஸ்டர் பிரகீத் சிவன், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம் முதியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “மாமன்”.
சூரி தன்னுடைய அக்கா சுவாசிகா மீது அளவு கடந்த பாசத்தை வைத்திருக்கிறார். சூரியை போலவே சுவாசிக்காவும் தன் தம்பி மீது மிகுந்த பாசத்தை வைத்திருக்கிறார்.
சுவாசிக்காவின் கணவராக பாபா பாஸ்கர் இருக்கிறார். இவர்களுக்கு பத்து வருடங்களாக குழந்தை இல்லாமல் இருக்கிறது. இதனால் பல இடங்களில் சுவாசிக்க அவமானப்படுகிறார்.
இந்த சூழ்நிலையில் சுவாசிக்கா கர்ப்பமாகிறார். இதனால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கும் சூரி, தன் அக்காவை எந்த வேலையும் செய்ய விடாமல் பத்திரமாக பார்த்துக் கொள்கிறார்.
அவருக்கு ஆண் குழந்தை பிறக்க அந்தக் குழந்தையை தன் கையில் முதன் முதலில் வாங்குகிறார் சூரி. குழந்தை மீது சூரி அளவு கடந்த பாசத்தை பொழிந்து வளர்த்து வருகிறார்.
ஐந்து வருடங்களுக்குப் பிறகு அந்த குழந்தை (பிரகீத் சிவன்) வளர்ந்து பள்ளிக்கு செல்கிறார்.
டாக்டர் ஆன ஐஸ்வர்யா லட்சுமியை ஐந்து வருடமாக காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் சூரி.
திருமணம் முடிந்த இரவு அன்று மாமாவுடன் தான் படுத்துக்கொள்வேன் என்று அடம் பிடிக்கிறார் பிரகீத். மூன்று மாதங்கள் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ளும் ஐஸ்வர்யா ஒரு கட்டத்தில் சூரியுடன் பிரச்சனை ஏற்படுகிறது. எங்கு சென்றாலும் எப்பொழுதும் தனது அக்கா மகனைப் பற்றிய பேசிக் கொண்டிருப்பதாகவும் தன் மேல் அக்கறையும் பாசமும் இல்லை என்றும் சூரியிடம் கோவப்படுகிறார் ஐஸ்வர்யா.
இதனால் சுவாசிக்காவுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையே கூட பிரச்சனை ஏற்படுகிறது.
ஒரு கட்டத்தில் சூரி ஐஸ்வர்யாவை அறைந்து விட இருவரும் பிரியும் சூழ்நிலை ஏற்படுகிறது.
இதனால் குடும்பத்தில் பிரச்சனையும் ஏற்படுகிறது.
சூரியும், ஐஸ்வர்யாவும் மீண்டும் இணைந்தார்களா? இல்லையா? என்பதே மாமன் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு : கே. குமார்
இயக்கம் : பிரசாந்த் பாண்டியராஜ்
இசை : ஹசிம் அப்துல் வஹாப்
எடிட்டிங் : கணேஷ் சிவா
ஒளிப்பதிவு : தினேஷ் புருஷோத்தமன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்