ஒரு தாயின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட கதை தான் ‘Maa’- இயக்குனர் சர்ஜுன்

‘லக்ஷ்மி’ குறும்படம் இயக்கியதின் மூலம் பல பாராட்டுக்களையும் விமர்சனங்களையும் பெற்ற சர்ஜூன் ‘ஒன்றாக என்டர்டைன்மெண்ட்’  நிறுவனம்  தயாரிப்பில் தனது அடுத்த குறும்படம்  ‘Maa’ வை வெளியிட்டுள்ளார். ஒரு பதினைந்து வயது பெண்ணின் தாயார்  சந்திக்கும் பிரச்சனைகள், மகளுக்கு துணை நின்று அதனை அவர் கையாளும் விதம் ஆகியவையை  அழகாகவும் அழுத்தமாகவும் சொல்லியிருக்கும் படம் தான் ‘Maa’. இந்த குறும்படம் பரவலாக பேசப்பட்டு  மக்களிடையே   நல்ல வரவேற்பை பெற்று வருகிறது..
இது குறித்து அதன் இயக்குனர் சர்ஜுன் பேசுகையில் , ” ஒரு தாயின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட கதை தான் ‘Maa’. துணிச்சலான பலமான பெண் கதாபாத்திரங்கள் என்னை என்றுமே ஈர்த்துள்ளன. இது  அப்படியான ஒரு தாயை பற்றிய கதை. ‘சந்தோஷத்தோடு மட்டுமே ஒரு ஒரு குழந்தை இந்த பூமிக்கு வந்தடையவேண்டுமே தவிர பயத்தோடு அல்ல’ என்பதே இந்த குறும்படத்தின் மைய்யக்கரு. கவுதம் மேனன் சாரிடம் நான் கூறிய இரண்டு கதைகளில் இதனை தேர்ந்தெடுத்து செய்தோம். இந்த ‘Maa’ குறும்படத்தை இயக்கியதில் நான்  பெரும் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன். ‘லக்ஷ்மி’ குறும்படம் முதலே எனக்கு பெருமளவு ஆதரவு தந்து கொண்டிருக்கும் கவுதம் சார், ரேஷ்மா மேடம் மற்றும் வெங்கட் சாருக்கு  எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் ”