லக்கி பாஸ்கர் விமர்சனம்

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில், துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி, சச்சின் கெடேகர், டின்னு ஆனந்த், ராம்கி, சாய் குமார், ரித்விக், சர்வதாமன் பானர்ஜி, ஷரத் கெடேகர், சூர்யா ஸ்ரீனிவாஸ், ராஜ்குமார் காசிரெட்டி, ராங்கி, ஹைப்பர் ஆதி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் லக்கி பாஸ்கர்.

நாயகன் துல்கர் சல்மான், மனைவி மீனாட்சி சவுத்ரி, மகன் ரித்விக், மற்றும் தம்பி தங்கை அப்பா உடன் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார்.

துல்கர் மும்பையில் இருக்கும் வங்கி ஒன்றில் வேலை செய்து வருகிறார். வங்கியில் பணி பிரிந்தாலும் குடும்ப சுமை காரணமாக அவர் பணப்பிரச்சினையால் பல இடங்களில் கடன் வாங்கி, அந்த கடனால் அவமானப்பட்டும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவர் பணி புரியும் வங்கிக்கு நேர்மையாக மட்டுமின்றி, பல செயல்களால் உயர் அதிகாரிகளால் பாராட்டும் வாங்குகிறார். அதனால் தனக்கு எப்படியும் உதவி மேலாளராக பதவி உயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கார். ஆனால் அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போக மன உளைச்சல் அடைகிறார்.

இதற்கிடையில் கடன் சுமையும் நெறுக்குகிறது. அதனால், நேர்மையை கைவிட்டுவிட்டு, தப்பு செய்தாலும் பரவாயில்லை நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற முடிவு செய்து, சில சிக்கலான வேலையை செய்ய ஆரம்பிக்கிறார்.

துல்கர் செய்யக்கூடிய காரியத்தால் அவர் என்ன மாதிரியான சிக்கல்களை மேற்கொள்கிறார். அந்த வேலை அவரை எந்த இடத்திற்கு அழைத்து செல்கிறது என்பதே லக்கி பாஸ்கர் படத்தோட மீதி கதை.

தொழில்நுட்ப வல்லுநர்கள்
இசை : ஜி.வி. பிரகாஷ் குமார்
எடிட்டிங் : நவீன் நூலி
ஒளிப்பதிவு : நிமிஷ் ரவி
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர் (D’one)