பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், ஸ்வஸ்விகா , சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளி வெங்கட், பால சரவணன், கீதா கைலாசம், தேவதர்ஷினி, ஜென்சன் திவாகர், டிஎஸ்கே மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் லப்பர் பந்து.
அட்டகத்தி தினேஷ் தனது குடும்பம், மனைவி, பிள்ளைகள், வேலை, இவற்றை விட கிரிக்கெட் விளையாட்டுக்கு தான் அதிக முக்கியத்துவத்தை கொடுக்கிறார். கிரிக்கெட் விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பதால் எந்த ஊரில் கிரிக்கெட் நடந்தாலும் விளையாடப் போய் விடுகிறார்.
ஹீரோ ஹரிஷ் கல்யாண் சிறந்த கிரிக்கெட் வீரராக இருந்தாலும் சாதி பிரிவினையால், தனது சொந்த ஊர் கிரிக்கெட் அணியில் விளையாட முடியாமல் நிராகரிக்கப்படுகிறார்.
இதனால் விளையாடுவதற்கு ஆளில்லாத எந்த அணி வாய்ப்பு வழங்குகிறதோ அந்த அணியில் சென்று விளையாடி தனது கிரிக்கெட் ஆசையை தீர்த்துக் கொள்கிறார்.
இந்த கிரிக்கெட்டின் மூலம் அட்டகத்தி தினேஷுக்கும் ஹரிஷ் கல்யாணிக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது.
அட்டகத்தி தினேஷ் மகளான ஸ்வஸ்விகாவை, ஹரிஷ் கல்யாண் விரும்பி கொண்டிருக்கிறார். இது தெரியாமல் இவர்கள் கிடையவே பிரச்சனை ஏற்பட காதலில் அதன் தாக்கம் ஏற்படுகிறது.
இதன் பிறகு தனது ஊர் அணியான கிரிக்கெட் விளையாட்டில் ஹரிஷ் கல்யாண் கலந்து கொண்டு வெற்றி பெற்றாரா? இல்லையா? ஸ்வஸ்விகாவுடனான காதல் திருமணத்தில் முடிந்ததா? இல்லையா? என்பதே ரப்பர் பந்து படத்தோட மீதி கதை
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம் : தமிழரசன் பச்சமுத்து
இசையமைப்பாளர் : ஷான் ரோல்டன்
ஒளிப்பதிவு இயக்குனர் : தினேஷ் புருஷோத்தமன்
கலை இயக்குனர் : வீரமணி கணேசன்
பாடல் வரிகள் : மோகன் ராஜன்
ஆடை வடிவமைப்பாளர் : தினேஷ் மனோகரன்
ஸ்டண்ட் : அபிஷேக் ஸ்ரீனிவாஸ்
எடிட்டர் : மதன் ஜி
இணை ஆசிரியர் : விநாயகமூர்த்தி தென்னரசு
விளம்பர வடிவமைப்பு : கண்ணதாசன் டிகேடி தயாரிப்பு நிர்வாகிகள் : சாதிக், எஸ் நாகராஜன்
ஒலி வடிவமைப்பு : டி உதயகுமார்
வண்ணம் : பிரசாத் சோமசேகர்
இணை இயக்குநர்கள் : விஜய் பிரபாகரன் செல்லா, மம்தா எம்.கே
ஸ்டில்ஸ் : பிரிதிவிராஜன் என்
மக்கள் தொடர்பு : ஏ. ஜான்
தயாரிப்பு நிர்வாகி : ஏ.பி.பால்பாண்டி
நிர்வாக தயாரிப்பாளர் : ஷ்ரவந்தி சாய்நாத்
இணை தயாரிப்பாளர் : ஏ வெங்கடேஷ் தயாரிப்பாளர் : எஸ் லக்ஷ்மன் குமார்