லவ் டுடே விமர்சனம் 4.5/5

நாயகன் உத்தமன் பிரதீப் (பிரதீப் ரங்கநாதன்), நாயகி நிகிதாவும் (இவானா) காதலிக்கின்றனர். வீட்டில் விஷயம் தெரிந்ததும் பிரதீப்பை வீட்டுக்கு வரச்சொல் கிறார் நிகிதாவின் அப்பாவான வேணு சாஸ்த்ரி(சத்தியராஜ்). சில கேள்விகளை கேட்டுவிட்டு இருவரின் மொபைல் போனையும் வாங்கி இருவரிடமும் மாற்றி கொடுத்து விடுகிறார். இருவரின் ரகசியமும் அவரவர் செல்போனில் இருக்கிறது. நிக்கிதாவின் பழைய காதலன், பிரதீப்பின் பழைய காதலிகள் அவரவர் செய்த காதல் லீலைகள் ஒவ்வொன்றாக இருவருக்கும் தெரிய வருகிறது. சிறியதாக தொடங்கும் இவர்கள் சண்டை நாளுக்கு நாள் அதிகமாகிறது. ரகசியங்கள் தெரியவரும் நிலையில் இருவரும் காதல் பிரேக் அப் செய்யும் சூழ்நிலை உருவாகிறது. இந்நிலையில் எல்லோரின் செல்போனுக்கும் நிகிதாவின் ஆபாச வீடியோ வருகிறது. இதனால் குடும்பத்தில் பெரிய பூகம்பம் வெடித்து வேணு சாஸ்திரி நிகிதாவை அடித்து திட்டுகிறார். இதனால் நிகிதா வீட்டிலிருந்து வெளியேறுகிறார். நிகிதா நிலை என்ன வானது? பிரதீப் எடுத்த முடிவு என்ன? நிகிதாவும், ப்ரதீப்மும் இணைந்தார்களா என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகை-நடிகர்கள்:

பிரதீப் ரங்கநாதன், சத்யராஜ், யோகி பாபு, இவானா, ராதிகா சரத்குமார், ரவீனா , ஃபைனலி பாரத, ஆதித்யா கதிர், ஆஜித் காலிக், விஜய் வரதராஜ், அக்ஷயா உதயகுமார், பிராத்தனா நாதன்மற்றும் பலர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:

தயாரிப்பு : ஏஜிஎஸ் எண்டெர்டைன்மென்ட்
கல்பாத்தி எஸ்.அகோரம்
கல்பாத்தி எஸ். கணேஷ்
கல்பாத்தி எஸ். சுரேஷ்
இயக்கம் : பிரதீப் ரங்கநாதன்
இசை : யுவன் சங்கராஜா
ஒளிப்பதிவு : தினேஷ் புருஷோத்தமன்
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்