லோகா – அத்தியாயம் 1 : சந்திரா விமர்சனம்

டொமினிக் அருண் இயக்கத்தில், கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லென் (நஸ்லென் கே கஃபூர்) சந்து சலீம்குமார், அருண் குரியன், சாண்டி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் லோகா – அத்தியாயம் 1 : சந்திரா.

அபரிமிதமான சக்திகளுடன் இருக்கும் கல்யாணி பிரியதர்ஷன் பெங்களூருக்கு வருகிறார். கல்யாணி பிரியதர்ஷன் அங்கு இருக்கும் பேக்கரி ஒன்றிலும் பணியாற்றி வருகிறார்.

அங்கு அவருக்கு எதிர் அடிக்குமாடி குடியிருப்பில் இருக்கும் நஸ்லன், சந்து சலீம்குமார் & அருண் குரியன் மூவரும் அவரின் அழகால் ஈர்க்கப்படுகிறார்கள்.

அதே நேரத்தில், ஒரு கும்பல் உடல் உறுப்புகளை திருடும் வேலை செய்து வருகிறது. அந்த கும்பல் கல்யாணி பிரியர்தஷனையும் கடத்துகிறது.

அந்த கும்பலுக்கும் காவல்துறை அதிகாரியாக இருக்கும் சாண்டிக்கும் தொடர்பு இருந்து வருகிறது.

கடத்திய கும்பலை கொலை செய்து உடலை யாருக்கும் தெரியாமல் மறைத்து விடுகிறார் கல்யாணி பிரியதர்ஷன்.

இதனை கண்டுபிடிக்க இறங்கும் சாண்டிக்கு கல்யாணி பிரியதர்ஷன் மீது சந்தேகம் வருகிறது. 

அதனை கண்டுபிடிக்க அவரை பின்தொடர்கிற சாண்டிக்கு கல்யாணி பிரியதர்ஷனுக்கு அபரிமிதமான சக்தி மட்டுமல்லாமல் வேறு ஏதோவொரு காரணமும் என்று தெரிய வருகிறது. கல்யாணி பிரியதர்ஷன் யார்? அவரைப் பற்றி தெரிந்ததும் அதன் பிறகு நடந்தது என்ன? என்பதே லோகா – அத்தியாயம் 1 : சந்திரா படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

இயக்கம் : டொமினிக் அருண்

இசை : ஜேக்ஸ் பிஜாய்

தயாரிப்பு : வேஃபேரர் பிலிம்ஸ்