லைன்மேன் விமர்சனம்

வினோத் சேகர் & தினகரன் பாபு ஆகியோர் தயாரிப்பில், உதய் குமார் & வினோத் சேகர் ஆகியோர் இயக்கத்தில், சார்லி, ஜெகன் பாலாஜி, சரண்யா ரவிச்சந்திரன், விநாயகராஜ், அருண்பிரசாத், தமிழ், அதிதி பாலன் ஆகியோர் நடிப்பில் ஆஹா ஒடிடி பிளாட்ஃபார்மில் வெளிவந்துள்ள படம் லைன்மேன்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் காயல்பட்டினத்தில் உள்ள உப்பளம் மின் மையத்தில் சார்லி லைன்மேனாக பணியாற்றி வருகிறார்.

சார்லியின் மகன் ஜெகன் பாலாஜி ஒரு மின் பொறியியல் பட்டதாரி. அவர்.
தனது கண்டுபிடிப்புகள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு உதவ செய்ய நினைக்கிறார்.
தெரு விளக்குகள் இரவில் தானாக எறிவதற்கும், காலையில் தானாகவே அனைவதற்கும் ஏற்றார் போல ஒரு கருவியை கண்டுபிடிக்கிறார். அதற்கு அங்கீகாரம் பெறுவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தினமும் செல்கிறார். இருப்பினும் அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை. இருப்பினும் அதனை சாதிக்க முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்க சென்னை வருகிறார்.

தனது முயற்சியில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே ‘லைன்மேன்’ படத்தோட மீதிக்கதை.

தொழில் நுட்பக்கலைஞர்கள்

ஒளிப்பதிவு : விஷ்ணு​ கே ராஜா,
இசை : தீபக் நந்தகுமார்
எடிட்டிங் : சிவராஜ்
மக்கள் தொடர்பு : நிகில்முருகன்