லில்லி ராணி விமர்சனம் 2.5/5

ராணி (சாயா சிங்) ஒரு விலைமாது, ஹோட்டலுக்கு ரைடுக்கு வரும் காவல் துறை அதிகாரி சம்பவ மூர்த்தி (தம்பிராமையா) ராணியிடம் அத்துமீறுகிறார். இரண்டு வருடங்கள் கழித்து குழந்தையுடன் வரும் ராணி சம்பவ மூர்த்தியிடம் முறையிட்டு அழுகிறார். தன் குழந்தை புற்றுநோயால் உயிருக்கு போராடுகிறது அதற்கு அறுவை சிகிச்சை செய்ய உதவ வேண்டும் என்கிறார். அதற்கு 50 லட்சம் செலவாகும் என்பதால் சம்பவ மூர்த்தி அதிர்ச்சி ஆகிறார். ஆனால் ஏற்கனவே ராணியிடம் மந்திரி மகன் ஒருவன் உறவு வைத்திருப்பது தெரிகிறது. குழந்தை அவனுக்கு பிறந்தது என்று சொல்லி சம்பவமூர்த்தி அவனிடம் பணம் கேட்கிறார். அவனும் பணம் தர சம்மதிக் கிறான். ஆனால் ராணியையும் குழந்தையையும் அழைத்துக் கொண்டு வெளிநாடு செல்ல போவதாக சொல்கிறான். அதற்கு ராணி சம்மதிக்க மறுக்கிறார். பிறகு என்ன நடந்தது?
குழந்தைக்கு ஆபரேஷன் நடந்ததா? இல்லையா? என்பதே படத்தோட மீதிக்கதை

 

நடிகை-நடிகர்கள்:

சாயா சிங், பேபி ரகுவாத் ஃபாத்திமா, தம்பி ராமையா, ஜெயபிரகாஷ், துஷ்யந்த் மற்றும் பலர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:

தயாரிப்பு: கிளாப் இன் சினிமாஸ், செந்தில் கண்டியர்

இசை: ஜெர்வின் ஜோஷுஹா

ஒளிப்பதிவு : ஷிவா தர்ஷன்

இயக்கம்: விஷ்ணு ராமகிருஷ்ணன்

பி. ஆர். ஒ: ஸ்ரீவெங்கடேஷ்