வேகமான இன்றைய வாழ்க்கை நெருக்கடியில் அனைத்து துறையை சேர்ந்தவர்களும் அனைத்து நிலையில் இருப்பவர்களும் பலவிதமான மன அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர். இப்படியான மன அழுத்தங்களினால் சில நேரத்தில் திடீர் இருதய நிறுத்தம்(cardiac arrest) ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் எதிர்பாராத மரணங்களினால் பலர் தங்கள் உறவுகளை இழப்பதோடு பெரிதும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். ஆனால், இப்படி திடீர் இருதய நிறுத்தம் ஏற்பட்டு சாவின் விளிம்பில் இருப்பவர்களை சிபிஆர் பற்றி தெரிந்திருந்தால் நம்மால் மீண்டும் அவர்களை உயிர் வாழ வைக்க முடியும். சிபிஆர் என்றால் ஆங்கிலத்தில் CPR – Cardiopulmonary Resuscitation என்று சொல்வார்கள்.
CPR / சிபிஆர் பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற பொதுநல நோக்கத்தோடு இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக சஞ்சீவன் கமிட்டியினர்,உயிர் காக்கும் முதலுதவி- LIFE SAVING CPR என்ற விழிப்புணர்வு படத்தை தயாரித்து தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியிட இருக்கிறார்கள்.
இந்த விழிப்புணர்வு படத்தின் நோக்கத்தைப் பாராட்டிய நடிகர்கள் சத்யராஜ், மற்றும் விஜய்சேதுபதி இருவரும் தாங்களே சி.பி.ஆர் பற்றி இந்த விளம்பரப் படத்தில் தோன்றி விளக்கியுள்ளார்கள். இயக்குநர் பாலாவின் உதவி இயக்குநர் கவின் ஆன்டனி இந்த விழிப்புணர்வு படத்தை இயக்கியுள்ளார்.
இந்த விழிப்புணர்வு படத்தின் நோக்கத்தைப் பாராட்டிய நடிகர்கள் சத்யராஜ், மற்றும் விஜய்சேதுபதி இருவரும் தாங்களே சி.பி.ஆர் பற்றி இந்த விளம்பரப் படத்தில் தோன்றி விளக்கியுள்ளார்கள். இயக்குநர் பாலாவின் உதவி இயக்குநர் கவின் ஆன்டனி இந்த விழிப்புணர்வு படத்தை இயக்கியுள்ளார். ஏற்கனவே தனது “அதிகாலை” குறும்படத்தின் மூலமாக ஒரு விபத்து ஏன் நடக்கிறது, ஒரு விபத்து நடக்க என்னென்ன காரணங்கள் இருக்க முடியும் என்பதை விவரமாக காட்சிப்படுத்திய கவின் ஆன்டனி, தமிழின் முன்னணி வார இதழின் சார்பாக தமிழகம் முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 இளைஞர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
இந்த விழிப்புணர்வு படத்திற்காக பெருந்தன்மையோடு உதவி செய்த நடிகர்கள் சத்யராஜ், விஜய் சேதுபதி எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்று சஞ்சீவன் கமிட்டியின் சேர்மன் டாக்டர் எம்.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
உயிர் காக்கும் முதுலுதவியான இந்த சி.பி.ஆர் பற்றி நாம் தெளிவாகத் தெரிந்துகொள்வோம். அதோடு நம் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இந்த விழிப்புணர்வு படத்தைப் பகிர்ந்து பார்க்கச் சொல்வோம். திடீர் இருதய நிறுத்தம் ஏற்பட்டு சாவின் கடைசி நிமிடத்தில் இருப்பவர்களை காப்பாற்றுவோம்.
விழிப்புணர்வு படத்தின் வீடியோ இணைப்பு : https://youtu.be/DnZRCeM_gpk
IMA Video on CPR (TAMIL) Awareness Film Link: https://youtu.be/DnZRCeM_gpk