எஃப்.எல்.ஓ சென்னை சட்ட விழிப்புணர்வு மூலம் சமுதாயத்தின் நல்வாழ்வை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட ஜாக்ரிதி அறக்கட்டளையுடன் இணந்து, சைபர் உலகத்தை நிர்வகிக்கும் சட்டங்கள் பற்றிய பேச்சு மற்றும் சைபர் குற்றங்களை அம்பலப்படுத்துதல், இணையத்தளம் பற்றிய புரிதல் மற்றும் வெளிப்பாடு, ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாக்குக் வழிகளை எதிர்த்து போராடுவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட இரண்டு உலகில் வாழ்க்கை: சைபர் மற்றும் ரியல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று அனைவருக்கும் கணினி அல்லது ஸ்மார்ட்போன் கிட்டத்தட்ட இணையத்துடன் இருக்கிறது. அவர்களது தினசரி நடவடிக்கைகளின் அனைத்து அம்சங்களிலும் ஒரு பகுதியாக சைபர் சட்டங்கள் உள்ளன. சைபர் ஸ்பேஸில் உள்ள ஒவ்வொரு செயலுக்கும் சட்ட உலகில் அதன் எதிர்வினை உள்ளது.
இந்த நிகழ்வில் முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும், அறிவுசார் சொத்து மேல்முறையீட்டு குழுவின் முன்னாள் தலைவருமான எஸ்.ஜெகதீசன் கலந்து கொண்டு, சைபர் உலகில் பேசசு சுதந்திரம் எனும் தலைப்பில் உரையாற்றினார். தொடர்ந்து முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளரும், கூடுதல் துணை ஆணையாளருமான எஸ்.வெங்கடாஜலபதி சைபர் குற்றங்கள் குறித்துப் பேசினார். ஜாக்ரிதி அறக்கட்டளையின் இணை நிறுவனர் வழக்கறிஞர் அஜய் சிங் இணையத்தில் என் தனியுரிமை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டம் குறித்து உளவியலாளர் டாக்டர் கீர்த்தி பாய் மற்றும் நடனக் கலைஞர், எழுத்தாளர் மற்றும் ஆராய்ச்சியாளருமான ஜெயந்தி வர்மா ஆகியோர் பேசினர்.