தோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் & டெல்டா ஸ்டியோஸ் சார்பில் கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் சாக்ஷி தோனி தயாரிப்பில், ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, ஆர்ஜே விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு, விடிவி கணேஷ், ஸ்ரீநாத், விநோதினி வைத்தியநாதன், தீபா சங்கர், விக்கல்ஸ் விக்ரம், ஹரி முனியப்பன், சாண்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘எல்.ஜி.எம்’.
ஹரிஷ் கல்யாணும், இவானாவும் இரண்டு வருட காதலுக்குப் பிறகு கல்யாணம் செய்துக்கொள்ள முடிவு செய்கிறார்கள். இவர்களுடைய திருமணத்திற்கு இரு பெற்றோர்களும் சம்மதிக்கிறார்கள்.
திருமண சம்பந்தம் நடக்கும் இவானா வீட்டில் ஹரிஷ் கல்யாணின் தாயார் நதியாவை பார்த்தவுடன் வீட்டைப் பகிர்ந்து கொள்வது பற்றி இவானாவுக்கு பயம் ஏற்படுகிறது.
கல்யாணத்திற்கு பிறகு மாமியாருடன் இருப்பது சிக்கல் என இவானா தெரிவிக்க, அப்பா இல்லாத ஹரிஷ் கல்யாண், தனது அம்மாவை தனியாக விடுவதை நினைத்து பார்க்க கூட முடியாது, என்று சொல்கிறார்.
இதனால் திருமண பேச்சு நின்று போகிறது. ஆனால் ஹரிஷ் கல்யாணை விரும்புவதால் இவானா ஒரு ஐடியா சொல்கிறார். திருமணத்திற்கு முன்பு இரண்டு குடும்பமும் சேர்ந்து ஒரு டூர் போகலாம், அப்போது வருங்கால மாமியாருடன் பழகிப்பார்த்து அவர் ஒகே ஆனால், திருமணம் செய்துகொள்ளலாம், இல்லை என்றால் திருமணம் வேண்டாம் என்கிறார்.
அதற்கு ஹரிஷ் கல்யாண் ஒப்புக்கொள்கிறார். இவானா தன் பெற்றோரிடம் உண்மையை சொல்லி பயணத்திற்கு அழைத்து வருகிறார். ஆனால் ஹரிஷ் கல்யாண் அம்மா நதியாவிடம் அலுவலக பயணம் என்று பொய் சொல்லி அழைத்து வருகிறார்.
இப்படி போகிற டூரால்
ஹரிஷ் கல்யாண் – இவானா ஜோடிக்கு திருமணம் நடந்ததா? இல்லையா? இவானாவுக்கும், நதியாவுக்கும் செட் ஆனதா? இல்லையா? ‘எல்.ஜி.எம்’ படத்தோட மீதிக்கதை.
தொழில் நுட்ப கலைஞர்கள்
கதை, திரைக்கதை, இசை, பாடல்கள், பின்னணி இசை, எழுத்து, இயக்கம் : ரமேஷ் தமிழ்மணி
ஒளிப்பதிவு : விஸ்வஜித்
எடிட்டிங் : பிரதீப், ராகவ்
கலை : அருண், வெஞ்சராமுடு
கிரியேட்டிவ் தயாரிப்பாளர் : பிரியன் சோப்ரா
தயாரிப்பாளர் : விகாஸ் ஹசிஜா
மக்கள் தொடர்பு : யுவராஜ்