முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் சேலத்தை சேர்ந்த திமுகவினர் அதிமுக அம்மா அணியில் தங்களை இணைத்து கொண்டனர். இந்த நிகழ்வுக்கு பின்பு செய்தியாளர்களிடம் முதல்வர் பேசுகையில், தமிழகத்தில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வு பிரச்சனையில் தமிழக மாணவர்கள் நலன் பாதுகாக்கப்படும் என்றும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அரசு முயற்சி செய்து வருகிறது.
அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லியில் முகாமிட்டு சம்மந்த பட்ட மத்திய அமைச்சர்களுடன் பேசி வருகிறார். அ.தி.மு.க. அணிகள் விரைவில் இணையும் ஒன்றுபட்ட அ.தி. மு.க.வை விரைவில் பார்க்கலாம். சட்டசபையில் முக்கிய பிரச்சனைகளை பேசவில்லை என்று ஓ.பன்னீர் செல்வம் கூறி இருக்கிறார். அவர் சபைக்கு வந்து இருந்தால் இப்படி கூறி இருக்க மாட்டார் என்று கூறினார்.