லியோ விமர்சனம்

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், திரிஷா, பிரியா ஆனந்த், மடோனா செபஸ்டியன், சஞ்சய் தத், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், கவுதம் மேனன், ஜார்ஜ் மரியான் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘லியோ’.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் லியோ ரிலீஸ் ஆனது.

விஜய், மனைவி திரிஷா, மகன் மகளுடன் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்து வரும் விஜய், ஒரு காபி ஷாப்பை நடத்தி வருகிறார். காபி ஷாப்பில் நடக்கும் ஒரு சம்பவத்தால், தனது குழந்தைக்கு ஏற்படும் பிரச்சனையால் 5 பேரை கொலை செய்துவிடுகிறார். பிறகு விடுதலையும் செய்யப்படுகிறார்.

இதனால், அவருடைய போட்டோ பத்திரிகைகளில் வெளியாக அதை பார்த்து ஆந்திர மாநிலத்தில் இருக்கும் போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் தங்களது கூட்டத்தோடு விஜயை தேடி இமாச்சல பிரதேசத்துக்கு வருகிறார்கள். அங்கு விஜயை பார்க்கும் அவர்கள், “நீ லியோ தானே” என்று கேட்கிறார்கள்.

ஆனால், விஜய் ”தான் பார்த்திபன், நீங்கள் வேறு யாரோ என்று நினைத்து பேசிக்கொண்டிருக்கிறீர்கள்” என்று சொல்ல, நீ லியோ என்று ஒப்புக்கொள்ளும் வரை உன்னையும், உன் குடும்பத்தையும் விட மாட்டோம் என்று கூறி அந்த கும்பல் விஜய்க்கு பிரச்சனைகள் கொடுக்கிறார்கள்.
என்ன மாதிரியான பிரச்சனைகளை விஜய் சந்திக்கிறார்? விஜய் அவர்களிடமிருந்து தன்னையும், தனது குடும்பத்தையும் எப்படி காப்பாற்றுகிறார், லியோ யார்? லியோக்கும், சஞ்சய் தத் & அர்ஜுனுக்கும் என்ன தொடர்பு? என்பது தான் படத்தின் ‘லியோ’ படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இயக்கம்: லோகேஷ் கனகராஜ்

இசை: அனிருத்

தயாரிப்பு: எஸ்எஸ் லலித் குமார்

ஒளிப்பதிவு : மனோஜ் பரமஹம்சா