தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகர் தனபால் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திற்கு பின்பு தலைமைசெயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மொத்தம் 24 நாட்கள் நடைபெறும் என்றும். ஜூன் 14 முதல் ஜூலை 19ஆம் தேதி வரை நடைபெறும் பேரவை கூட்டத்தொடரானது காலை 10 மணிக்கு கூடும் சட்டசபையில் எல்லாம் நாட்களிலும் கேள்வி நேரம் உண்டு. மானிய கோரிக்கைகளுக்கு இடையே சில மசோதாக்களும் தாக்கல் செய்யப்படலாம், ஜி.எஸ்.டி. மசோதா தொடர்பாக எந்த ஒரு தகவலும் வரவில்லை வந்தால் ஏற்றுக்கொள்ளபடும் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
துறை ரீதியாக நடைபெறும் மானிய கோரிக்கையின் பட்டியல் :
14ஆம் தேதி வனம் மற்றும் சுற்றுசூழல் துறை,
15ஆம் தேதி பள்ளி கல்வி, இளைஞர் நலம் மற்றும் உயர்கல்வி,
16ஆம் தேதி கூட்டுறவு மற்றும் உணவு,
17 மற்றும் 18ஆம் தேதி அரசு விடுமுறை,
19ஆம் தேதி மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வு,
20 மற்றும் 21ஆம் தேதி உள்ளாட்சி துறை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு செயலாக்கம்,
22ஆம் தேதி நீதி நிர்வாகம், சிறைச்சாலை, சட்டத்துறை, சுற்றுலா மற்றும் கலைபண்பாடு,
23ஆம் தேதி தொழில் துறை, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்,
24ஆம் தேதி சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டம் துறை, நடைபெறும்.
அதைத்தொடர்ந்து 25,26,27 ஆகிய தேதிகளில் பேரவை கூட்டம் கிடையாது.
28ஆம் தேதி நெடுஞசாலை துறை,
29ஆம் தேதி கைத்தறி மற்றும் துணி நூல் துறையின் மானிய கோரிக்கை நடைபெறும்.
அதைத்தொடர்ந்து 30 பேரவை கூட்டம் இல்லை ஜூலை 1 மற்றும் 2ஆம் தேதி அரசு விடுமுறை.
ஜூலை 3 தேதி வீட்டு வசதி,
4ஆம் தேதி சுகாதார துறை,
5ஆம் தேதி வேளாண்மை துறை,
6 மற்றும் 7ஆம் தேதிகளில் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையின் மானிய கோரிக்கை,
8ஆம் தேதி மற்றும் 9 ம் தேதி அரசினர் விடுமுறை
10ஆம் தேதி காவல் மற்றும் தீயணைப்பு துறைக்கு முதலமைச்சரின் பதிலுரை, அன்று
கேள்வி நேரம் ஒத்திவைக்கப்படும் முதல்வரின் பதிலுரையை முடிந்த பின்பு வருவாய் துறை மற்றும் இயற்க்கை சீற்றத்திற்கான மானிய
கோரிக்கை எடுத்துக்கொள்ளப்படும்.
11ஆம் தேதி மீன்வளம், பால்வளம், கால்நடை பராமரிப்பு,
12ஆம் தேதி வணிகவரிகள், முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவு,
13ஆம் தேதி தொழிலாளர் வேலைவாய்ப்பு பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் துறை,
14ஆம் தேதி செய்தி மற்றும் விளம்பரம் எழுத்து பொருள் மற்றும் அச்சு துறை, தமிழ் வளர்ச்சி இந்து அறநிலைத்துறை,
15ஆம் தேதி மற்றும் 16 ம் தேதி அரசு விடுமுறை,
17ஆம் தேதி 18ஆம் தேதி மற்றும் இறுதிநாளான 19ஆம் தேதி விவாதங்கள் நடைபெற்று பேரவை கூட்டம் நிறைவுபெறும்.